ANTARABANGSAMEDIA STATEMENT

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் சர்தாரி மேலும் ஒரு தவணைக்கு வெற்றி

இஸ்லாமாபாத், மார்ச் 10- பாகிஸ்தான் முன்னாள் அதிபர் அஸிஃப் அலி சர்தாரி இரண்டாம் தவணைக்கு வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்றம் மற்றும் பிராந்திய சட்ட சபைகளில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அவர் வெற்றி பெற்றார்.

அதிபர் பதவி என்பது பாகிஸ்தானில் வெறும் சடங்குப்பூர்வ பதவியாக இருந்தாலும் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் சூத்திரதாரியாக சர்தாரி விளங்குகிறார். அவரின் இந்த வெற்றி பொருளாதார நலிவை எதிர்நோக்கியுள்ள அந்நாட்டை வழிநடத்துவதற்கு ஏதுவாக அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் முக்கியப் பங்கினை ஆற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாகிஸ்தானில் அரசாங்கத்தை உருவாக்குவதில் அல்லது கவிழ்ப்பதில் அளப்பரிய அதிகாரத்தைக் கொண்டுள்ள அந்நாட்டு இராணுவத்தின் உச்ச தளபதியாக அதிபர் என்ற முறையில் சர்தாரி விளங்குகிறார்.

சர்தாரியின் இந்த வெற்றியை தேர்தல் அதிகாரி நீதிபதி அமிர் ஃபாரூக் நேற்று தொலைக்காட்சி வழி அறிவித்தார்.


Pengarang :