ANTARABANGSA

காஸாவில் கர்ப்பிணி பெண்கள் தண்ணீர், உணவு, கூடாரம் இல்லாமல் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றனர்

இஸ்தான்புல், மார்ச் 27: கடந்த ஞாயிற்றுக்கிழமை காசாவில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) மகளிர் நிர்வாக இயக்குநர் சிமா பஹோஸ் பெண்களின் அவலநிலையை குறித்து தெரிவித்தார். முற்றுகையிடப் பட்ட பிரதேசத்தில் உடனடி போர்நிறுத்தத்தின் தேவையை வலியுறுத்தினார்.

காஸாவில் உள்ள கர்ப்பிணி பெண்கள் தண்ணீர், உணவு, கூடாரங்கள் அல்லது கழிப்பறை வசதிகள் இல்லாமல் தங்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர் என்று கூறினார். அவர்கள் கடினமான சூழ்நிலைகளில் வாழ்கிறார்கள் என பஹோஸ் தெரிவித்தார்.

“காஸாவில் உள்ள பெண்களுக்கு இப்போது தேவைப்படுவது போர் நிறுத்தம் மற்றும் உதவி ஆகும்” என்று அவர் கூறியதாக அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 7 முதல் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலில் காசாவில் 9,000க்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 23,000க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர்.

காஸாவில் காணாமல் போன 2,000க்கும் மேற்பட்ட பெண்களின் கதி இன்னும் தெரியவில்லை.

கூடுதலாக, இஸ்ரேலிய தாக்குதலால் முடங்கிய காசாவில் உள்ள சுகாதார அமைப்பு குறைந்தது 60,000 கர்ப்பிணிப் பெண்களுக்குச் சுகாதார சேவைகளை வழங்க முடியாமல் போனது. இது பாலஸ்தீனிய பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

இஸ்ரேலிய தாக்குதலில் 32,200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 74,500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர் மற்றும் பெரிய அழிவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

-பெர்னாமா-அனடோலு


Pengarang :