SELANGOR

ஏஹ்சான் மார்ட் கிளைகளில் ஏப்ரல் 8ஆம் தேதி மலிவு விற்பனை

ஷா ஆலம், ஏப் 5 – நோன்புப் பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 8ஆம்
தேதி அனைத்து ஏஹ்சான் மார்ட் கடைகளிலும் பிரத்தியேக மலிவு
விற்பனையை சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம்
(பி.கே.பி.எஸ்.) நடத்தவிருக்கிறது.

இந்த மலிவு விற்பனை ஷா ஆலம் செக்சன் 14 விஸ்மா பி.கே.பி.எஸ்.
கிளை, செக்சன் 9 கிளை, மேரு கிளை மற்றும் பெஸ்தாரி ஜெயாவிலுள்ள
சிலாங்கூர் ஃபுரூட் வேலியில் காலை 8.00 மணி முதல் இந்த மலிவு
விற்பனை நடைபெறும் என்று அக்கழகம் கூறியது.

இந்த விற்பனையின் போது வெ.18.80 மதிப்பிலான அரிசி 13 வெள்ளிக்கும்
17.70 வெள்ளி மதிப்புள்ள கோழி 10.00 வெள்ளிக்கும் 12.90 வெள்ளி
மதிப்பிலான முட்டை 10.00 வெள்ளிக்கும் 16.80 வெள்ளி மதிப்பிலான
உறையவைக்கப்பட்ட இறைச்சி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படும் என அது
தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

வசதி குறைந்த மக்கள் அத்தியாவசியப் பொருள்களை மலிவு விலையில்
வாங்குவதற்கு ஏதுவாக மாநில அரசு ஏஹ்சான் ரஹ்மா திட்டத்தை கடந்த
2022ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தி வருகிறது. பி.கே.பி.எஸ். டிரக்குகள்
மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இந்த விற்பனை நடத்தப்படுகிறது.

இந்த விற்பனையில் கோழி, முட்டை, இறைச்சி, மீன், சமையல்
எண்ணெய், அரிசி உள்ளிட்ட பொருள்களை சந்தையை விட 30 விழுக்காடு
குறைவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பு பொதுமக்களுக்குக்
கிடைக்கிறது.


Pengarang :