EKSKLUSIFNATIONAL

இன்று காலை 11.00 மணி நிலவரப்படி முக்கிய நெடுஞ்சாலைகளில்  சீரான போக்குவரத்து

கோலாலம்பூர், ஏப் 7- இன்று காலை 11.00 மணி நிலவரப்படி நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளின் சில பகுதிகளில் வாகன எண்ணிக்கை அதிகரித்தாலும் வாகனப் போக்குவரத்து சீராகவே உள்ளது.

கோம்பாக் டோல் சாவடியில் (கிழக்கு கரைக்கான தடம்) இன்று காலை 10.00 மணியளவில் வாகனங்கள் அதிகரித்து காணப்பட்டாலும் தற்போது போக்குவரத்து சீராகவும் கட்டுப்பாட்டிலும் உள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்த்தின் பேச்சாளர் கூறினார்.

கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் நேற்று பதிவான 178,977 வாகனங்கள் அளவுக்கு இன்றும் வாகனப் போக்குவரத்து காணப்பட்டாலும் அந்த நெடுஞ்சாலையில் நெரிசல் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள மற்ற முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, நோன்புப் பெருநாளை முன்னிட்டு நெடுஞ்சாலைகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்ய நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் ஸ்மார்ட் லேன் எனப்படும் விவேகத் தடம் திறக்கப்பட்டுள்ளது என்று பிளஸ் டிரபிக் எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் நெடுஞ்சாலையின் தாப்பா முதல் கோப்பெங் வரையிலான வடக்கு தடம், ஆயர் குரோ முதல் ஜாசின் வரையிலான தெற்கு தடம் மற்றும் யுஎஸ்ஜே முதல் சீபீல்டு வரையிலான  வடக்கு தடம் ஆகிய பகுதிகளில் ஸ்மார்ட் லேன்கள் திறக்கப்பட்டுள்ளன என்று அது தெரிவித்தது.


Pengarang :