SELANGOR

டிங்கி காய்ச்சல் சம்பங்களைக் குறைக்க கண்காணிப்பு தேவை

ஷா ஆலம், மே 3: சுபாங் ஜெயா மாநகராட்சி 21 டிங்கி ஹாட் ஸ்பாட்களை கண்டறிந்துள்ளது. அக்குறிப்பிட்ட இடங்களில் டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் அதிகரிப்பதைத் தவிர்க்க கண்காணிப்பு தேவைப்படுகிறது.

அனைத்து தரப்பினரும், குறிப்பாகக் கவுன்சிலர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஏடிஸ் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மேயர் கேட்டுக் கொண்டார்.

டிங்கி காய்ச்சல் சம்பவங்களை தடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானது. தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் குடிமை பிரதிநிதி சங்கங்களுடன் (எம்பிபி) ஒத்துழைக்க எம்பிஎஸ்ஜே தயாராக உள்ளது.

“கண்காட்சிகள், விளக்கங்கள் மற்றும் அழிக்கும் நடவடிக்கைகளை எளிதாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் உதவி வழங்க முடியும்” என சுபாங் ஜெயா மாநகராட்சி தலைமையகத்தின் மாதாந்திர கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய முகமட் ஃபௌசி முகமட் யாதிம் கூறினார்.

சுபாங் ஜெயாவில் 16ஆம் தொற்றுநோய் வாரத்தில் மொத்தம் 3,996 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த எண்ணிக்கையைக் கடந்த ஆண்டுடன் (2,331) ஒப்பிடும்போது 71.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

“இருப்பினும், தற்போது டிங்கி சம்பவங்கள் குறையும் போக்கைக் காட்டுகின்றன.இந்த நிலை தொடரும் மற்றும் ஒட்டுமொத்த எம்பிஎஸ்ஜே பகுதியில் உள்ள மக்களின் சுகாதார நிலையை மேம்படுத்த முடியும் என்று நம்புவதாக அவர் கூறினார்.


Pengarang :