NATIONAL

பூனை எரிக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை டிவிஎஸ் திறந்துள்ளது

புத்ராஜெயா, மே 3: ஏப்ரல் 22 அன்று, சுங்கை கெனாரி பிளாட், சுங்கை ரமால் பாரு, காஜாங்கில் பூனை எரிக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை சிலாங்கூர் கால்நடை மருத்துவ சேவை துறை (டிவிஎஸ்) திறந்துள்ளது.

விலங்குகள் நல சட்டம் 2015 இன் (சட்டம் 772) கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக டி.வி.எஸ் அறிக்கையில் தெரிவித்தது.

“மேலும், டிவிஎஸ் சிலாங்கூர் கால்நடை மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பூனை நல்ல நிலையில் உள்ளது என அத்துறை தெரிவித்தது.,” .

வழக்கின் விசாரணைக்கு இடையூறாக இருக்கக் கூடிய எந்த ஊகங்கள் அல்லது செயல்களைச் செய்ய வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு வைரலானது. அதில் மூன்று ஆண்கள் பிளாட்டின் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தில் பேசிக் கொண்டிருப்பதையும் மற்றும் அவர்களில் இருவர் அப் பூனையின் மீது எரிபொருளாக நம்பப்படும் திரவத்தைத் தெளித்து தீ மூட்டியதும் பதிவாகியிருந்தது. .

இந்த வழக்கு தொடர்பாக ஏப்ரல் 24 அன்று உலு லங்காட் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் இருந்து அறிக்கை பெற்றதை டிவிஎஸ் உறுதிப்படுத்தியது.

– பெர்னாமா


Pengarang :