MEDIA STATEMENTPENDIDIKAN

 மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகத்தில் தீ விபத்து

ஆராவ், மே 15: கடந்த சனிக்கிழமையன்று மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் (யுனிமேப்) பாவ் புத்ரா குடியிருப்பு வளாகத்தின் பி பிளாக்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நிலை, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கவனத்தைப் பெற்றது.

இந்த சம்பவத்தில் 36 மாணவர்களின் மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததை அடுத்து, அவர்களுக்குப் பண உதவி வழங்கிய 

நிதியமைச்சராக இருக்கும் பிரதமரின் அக்கறையில் தாம் மகிழ்ச்சி அடைவதாகக் வளாகத்தின் முதல்வர் முகமட் சியாமரில் அக்ல்மர் செக் காசிம் கூறினார்.

இந்த நன்கொடையை நிதியமைச்சரின் அரசியல் செயலாளர் முகமட் கமில் அப்துல் முனிம் வழங்கினார், அவர் சம்பவம் நடந்த இடத்தையும் பார்வையிட்டார்.

“எட்டு மாணவர்கள் இந்த நன்கொடைகளைப் பெற்றனர், மீதமுள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளதால் அவர்களுக்கு பின்னர்  இந்த உதவி வழங்கப்படும்,” என்று முதல்வர் கூறினார்.

மேலும், இச்சம்பவத்தில் 564 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட கட்டிடங்களை சீர்செய்வதற்கான செலவு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மே 11 அன்று, யுனிமேப் ஆண்கள் தங்குமிட வாகன நிறுத்துமிடம் அதிகாலையில் தீப்பிடித்ததில் 26 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததாகவும் மேலும் 10 மோட்டார் சைக்கிள்கள் சிறிய சேதங்களுக்கு உள்ளானதாகவும் ஊடகங்கள் தெரிவித்தன.

இந்த சம்பவம் குறித்து அதிகாலை 4.43 மணிக்குத் தனக்கு தகவல் கிடைத்ததாக அராவ் மாவட்ட காவல்துறை தலைவர் அஹ்மட் மொஹ்சின் முகமட் ரோடி மேற்கோள் காட்டினார்.

 

– பெர்னாமா


Pengarang :