ECONOMYMEDIA STATEMENT

பேரரசருக்கு பிரதமர் அன்வார் பிறந்த நாள் வாழ்த்து

கோலாலம்பூர், ஜூன் 3 – இன்று அதிகாரப்பூர்வ பிறந்தநாளைக் கொண்டாடும்   மாட்சிமை தாங்கிய  பேரரசர் சுல்தான் இப்ராஹிமிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பேரரசர், பேரரசியார் மற்றும் அனைத்து  அரச குடும்பம்பத்தினரும் நல்ல ஆரோக்கியம், செழிப்பு மற்றும் இறையாண்மையுடன் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்று ஒற்றுமை அரசாங்கத்தின் சார்பாக தாம் பிரார்த்திப்பதாக  அன்வார் தனது வாழ்த்துச் செய்தியில் கூறினார்.

நாட்டின்  தலைவராகவும், இஸ்லாத்தின் பாதுகாவலராகவும், இந்நாட்டில் உள்ள அனைத்து இனங்களின் ஒற்றுமை மற்றும் நல்வாழ்வின் அடையாளமாகவும் இருந்து  நியாயமாகவும், சமநிலையுடனும் புரிந்து வரும் மாமன்னரின் ஆட்சி நிலைத்திருக்கட்டும் என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நானும் அனைத்து மக்களும் தொடர்ந்து அரசியலமைப்பு முடியாட்சிக்கு கீழ்ப்படிந்து விசுவாசமாக இருப்போம். திர்கஹாயு துவாங்கு! என அவர் மேலும் கூறியுள்ளார்.


Pengarang :