ECONOMYMEDIA STATEMENTNATIONAL

டிங்கி சம்பவங்களின் எண்ணிக்கை 2,438ஆகக் குறைந்துள்ளது

புத்ராஜெயா, ஜூன் 29: ஜூன் 16 முதல் 22 வரையிலான 25வது தொற்றுநோயியல் வாரத்தில் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தில் பதிவான 2,900 சம்பவங்களுடன் ஒப்பிடும்போது 2,438 ஆகக் குறைந்துள்ளது.

டிங்கி காய்ச்சலினால் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார இயக்குனர் ஜெனரல் டத்தோ டாக்டர் முகமட் ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.

மேலும், 2023ஆம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 56,721 டிங்கி சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் இவ்வாண்டு 72,475 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

“அதுமட்டுமில்லாமல், டிங்கி காய்ச்சலால் 55 இறப்புகள் பதிவாகியுள்ளன,” என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

இதற்கிடையில், முந்தைய வாரத்தில் 85 ஹாட்ஸ்பாட் இடங்களுடன் ஒப்பிடும்போது இவ்வாரம் 81 இடங்கள் பதிவாகியுள்ளன என்று கூறினார்.

மேலும் 81 வட்டாரங்களில், சிலாங்கூரில் 59 இடங்களும், பேராக்கில் 6 இடங்களும், கெடாவில் 5 இடங்களும், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் பினாங்கில் தலா 3 இடங்களும், நெகிரி செம்பிலான் மற்றும் சரவாக்கில் தலா 2 இடங்களும் மற்றும் சபாவில் ஒன்று என பதிவாகியுள்ளன.

 

– பெர்னாமா


Pengarang :