MEDIA STATEMENT

மாலாம் எஹ்சான் உந்தோக் இன்சான் நிகழ்ச்சியில் சுமார் 80,000 முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்

ஷா ஆலம், ஜூலை 12: ஷா ஆலம் அரங்க வளாகத்தில் உள்ள டத்தாரான் கர்னிவாலில் நடைபெற்ற மாலாம் எஹ்சான் உந்தோக் இன்சான் நிகழ்ச்சியில் சுமார் 80,000 முஸ்லிம்கள் கனமழையிலும் கலந்து கொண்டனர். 

மால் ஹிஜ்ரா 2024/1446 கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரபல இந்தோனேசியப் போதகர் உஸ்தாஸ் அப்துல் சோமட் படுபாராவின் சொற்பொழிவை கேட்க மக்கள் திரண்டனர்.

மலேசியா இஸ்லாமிய அமைப்பின் (மாபிம்) ஆலோசனைக் குழு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி, மக்ரிபுக்குப் பிறகு ரப்பானி குழுவினரின் நிகழ்ச்சி, தொழுகை மற்றும் கஸிதாவுடன் தொடங்கியது.

உஸ்தாஸ் அப்துல் சோமத் அவர்கள் பாலஸ்தீனம் பற்றிய உரையை ஆற்றினார். கூட்டத்தை நிறைவு செய்வதற்கு முன், மாநிலத்தின் நல்வாழ்வுக்காகவும், குறிப்பாகக் காஸாவிலுள்ள முஸ்லீம்களின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தனை செய்தார்.

பாலஸ்தீன மக்களின் துன்பம் குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதற்காக மாநில அரசின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது சுருக்கமான உரையில் தெரிவித்தார்.


Pengarang :