ECONOMYMEDIA STATEMENT

உணவுக் கூடைத் திட்டத்திற்கு எம்.பி.ஐ. அறவாரியம்  கூடுதலாக வெ.200,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜூலை 16-  உணவு கூடை உதவித் திட்டத்தை மேலும் வெற்றிகரமாகச் செயல்படுத்த எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி   புசார் கழகம்  200,000 வெள்ளி  கூடுதல் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

உதவி தேவைப்படுவோர்,  குறிப்பாக குறைந்த வருமானம் பெறுவோர் தொடர்ந்து பலன்களைப் பெறுவதை உறுதி செய்வதற்காக  கடந்த ஜூன் மாதம் இந்த கூடுதல் ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டது என்று எம்.பி.ஐ. அறவாரியத்தின் தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர்   கூறினார்.

இந்த உணவு கூடை உதவித் திட்டம் இன்னும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நோக்கத்திற்காக  இவ்வாண்டு ஒதுக்கப்பட்ட 10 லட்சம் வெள்ளி முழுமையாக  விநியோகிக்கப்பட்டு விட்டது.  எனவே, 200,000  வெள்ளி கூடுதல் ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

மாநில அரசு மக்கள் மீது அக்கறையும் பரிவும்  கொண்டுள்ளதை இன்னும் தொடர்ந்து நடத்தப்படும் இந்த உணவுக் கூடை உதவித் திட்டம் நிரூபிக்கிறது என்று அவர்  இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

இதற்கிடையில், இந்த உதவி திட்டத்திற்கு  அந்தந்த பகுதிகளில் உள்ள தொடர்புடைய தரப்பினரிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்  தெரிவித்தார்.

இந்த உணவு கூடைத் திட்டம் கிராமப்புறங்கள் உள்ளிட்ட பகுதிகளில்  மேலும் பிரபலமடைந்து வருகிறது. கிராமத் தலைவர்கள்,
கவுன்சிலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து உதவி கோரி கோரிக்கைகள் தொடர்ந்து வருகின்றன என அவர் குறிப்பிட்டார்.


Pengarang :