ECONOMYMEDIA STATEMENT

இவ்வாண்டு ஆறு மாதங்களில் ஃபாமா RM1.2 பில்லியன் மதிப்பில் விற்பனை 

கோத்தா பாரு, ஜூலை 27: இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நாடு முழுவதும் ஃபாமா அதன் பல்வேறு திட்டங்கள் மூலம் RM1.2 பில்லியன் மொத்த விற்பனையை பதிவு செய்துள்ளது.

அந்தத் தொகையின் அடிப்படையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள RM800 மில்லியனை ஃபாமா எட்டும், அதன் மூலம் 2024ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட RM2 பில்லியன் விற்பனை இலக்கை அடையும் என்று தனது தரப்பு நம்பிக்கை கொண்டுள்ளதாக ஃபாமா தலைவர் அமினுடின் சுல்கிப்லி கூறினார்.

, அக்ரோ மடாணியின் 4,102 விற்பனைத் தொடர்கள் மூலம் சுமார் RM80 மில்லியனுக்கும் அதிகமான விற்பனையை பதிவு செய்துள்ளது.தவிர “ஃபாமா ஃபெஸ்ட் மற்றும் பிற ஃபாமா விற்பனைகளும் மொத்த தொகைக்கு  உதவியுள்ளது என்று அவர் நேற்று ஃபாமா பீஸ்ட் நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும், 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஃபாமா ஃபெஸ்ட் கடந்த ஆண்டு வரை 2,180 தொழில்முனைவோரின் பங்கேற்புடன் RM24 மில்லியன் விற்பனையை பதிவு செய்ததாகவும், இந்த ஆண்டு நிகழ்வில், 755 தொழில்முனைவோரை உள்ளடக்கிய RM7.85 மில்லியன் விற்பனையை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் அமினுடின் கூறினார்.

இந்தத் திட்டம், உள்ளூர் பொருளாதார மீட்பு முயற்சிகளுக்கு உதவுகிறது மற்றும் வணிக பொருத்தம் மற்றும் தொழில் முனைவோர் இடமிருந்து நுகர்வோருக்கு நேரடி விற்பனை மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்த ஆண்டு முழுவதும் எட்டு இடங்களில் ஃபாமா ஃபெஸ்ட் விற்பனை நடைபெறும். அதில் கிளந்தான் உட்பட ஆறு இடங்களில் ஃபாமா ஃபெஸ்ட் விற்பனை நடைபெற்றது.அதைத் தொடர்ந்து கோலாலம்பூர் மற்றும் சபா விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

– பெர்னாமா


Pengarang :