MEDIA STATEMENTSELANGOR

ஜாலூர் கெமிலாங்கை பறக்கவிடும் நிகழ்வு பிரதமர் தலைமையில் நடைபெற்றது

கோலாலம்பூர், ஜூலை 28-  தேசிய மாத பிரச்சாரம் மற்றும் ஜாலூர் ஜெமிலாங்கை (தேசியக் கொடி)  பறக்கவிடும் இயக்கம் நாட்டுப் பற்று மீதான உணர்வை  ஆகஸ்டு 31ஆம் தேதி அடிக்கடி நம் மனதில் ஏற்படுத்துகிறது.  இதன் முதல் நிகழ்வு கடந்த  2023 இல் பேராக்கில் நடத்தப்பட்ட நிலையில்  இந்த ஆண்டு கொண்டாட்டத்தை சிலாங்கூர் ஏற்று நடத்துகிறது.

கடந்த ஜூலை 21 ஆம் தேதி சிப்பாங்கில் உள்ள சைபர்ஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்நிகழ்வை  அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.  இந்த விழாவில்  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் மற்றும்  அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் ஸுக்கி அலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு சமூகத்தின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவுக்கு மத்தியில் பிரதமர்  மேடையில் சிறார்களுடன்  சேர்ந்து ஜாலூர் ஜெமிலாங்கை அசைத்து மகிழ்ச்சியைப் புலப்படுத்தினார்.

மாநில அரசுகள் மற்றும் கலாச்சார நிறுவனங்களின் சாதனைகளை வெளிப்படுத்தும்  நோக்கில்   “மலேசியா மடாணி: மெர்டேக்கா உணர்வு”  என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்த ஒரு நாள்  நிகழ்வு  நிகழ்ச்சி, 67வது தேசிய தினம் மற்றும் 61வது மலேசியா தினத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டது.


Pengarang :