SELANGORSUKANKINI

பாரிஸ் ஒலிம்பிக்- ஒரே நாளில் 4 தங்கம் 2 வெள்ளி மற்றும் 1 வெங்கலம் பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது அமெரிக்கா

பாரிஸ், ஆகஸ்ட் 2 – பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 6 வது நாளான நேற்று பதக்க வரிசையில்  அமெரிக்கா மீண்டும் தலைதூக்க முற்பட்டுள்ளது.  நேற்று ஒரே நாளில்  4 தங்கம்  2 வெள்ளி மற்றும் 1 வெங்கலம் பெற்று இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது, அதே வேளையில் சீனாவும் நேற்று 2 தங்கம் மற்றும் 3 வெங்கலம் பெற்று பதக்க பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது. சீனாவின் ஆதிக்கம்  தொடர்கிறது.

நேற்று அதிகாலை நடைபெற்ற ஒரு கால் இறுதி பூப்பந்து விளையாட்டில் மலேசியாவின் ஆண்கள் இரட்டையர் அணி ஏரன் -வூய் ஈக்  ஜோடி  இந்தியாவின் பிரசித்தி பெற்ற சாத்விக் சாய்ராஜ் – ரெங்கி ரெட்டியை  13-21, 21-14, 21-16 என்ற புள்ளி கணக்கில்  58 நிமிடங்களில் தோற்கடித்துள்ளனர். அந்த வெற்றி தொடருமா? இன்று நடைபெற உள்ள அரை இறுதி போட்டி ஒன்றில் மலேசியாவின் பேர்லி தான் – மு.தீனா ஜோடி களம் இறங்க உள்ளார்  அதில் அவர்களின் வெற்றியை மிக ஆவலுடன் மலேசியர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Pengarang :