MEDIA STATEMENTSELANGOR

சுக்மா 2024- சிலாங்கூர் அணியின் 900 உறுப்பினர்கள் தொடக்க விழா பேரணியில் பங்கேற்பு 

கூச்சிங், ஆக. 18- சரவா மாநிலத்தில் நடைபெறும் 21வது மலேசியப் போட்டி விளையாட்டின் (சுக்மா) சடங்குப்பூர்வ தொடக்க விழாவில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 706 விளையாட்டாளர்களும் 213 அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சரவா விளையாட்டரங்கில் நேற்றிரவு நடைபெற்ற இந்த கோலாகல தொடக்க விழாவின் கண்கவர் அணிவகுப்பில் பங்கேற்ற சிலாங்கூர் அணிக்கு இளைஞர். விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி தலைமை தாங்கினார்.

கடந்த 2023 சுக்மா போட்டியில் பங்கேற்றவரான  தூரம் தாண்டும் விளையாட்டாளரான முகமது இஸூல் ஹனிப் முகமது ராஃபிக்கு அணிவகுப்பில்  கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பல்வேறு நிலைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் சிலாங்கூர் அணி வெள்ளை நிற கழுகுச் சின்னத்தில் அரங்கை வலம் வந்தது.

இந்த சுக்மா போட்டியின் தொடக்க விழாவில் 15 மாநில அணிகளைச் சேர்ந்த 10,481 விளையாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியின் உபசரணை மாநிலமாக சரவா மிக அதிகமாக அதாவது 1,054 பேரை இப்போட்டிக்கு அனுப்பியுள்ள வேளையில் சபா சார்பில் 946 விளையாட்டாளர்களும் சிலாங்கூரைப் பிரதிநிதித்து 919 விளையாட்டாளர்களும் பங்கேற்கின்றனர்.

இந்த தொடக்க விழாவை சரவா யாங்டி பெர்த்துவா நெகிரி துன் வான் ஜூனைடி துவாங்கு ஜாபர் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ மற்றும் சரவா முதல்வர் டான்ஸ்ரீ அபாங் ஜெஹாரி அபாங் ஓபேங் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்


Pengarang :