MEDIA STATEMENT

கற்பழித்த காமுகனே அப்பெண்னை திருமணம் செய்வதால் பிரச்சனைக்கு தீர்வாகாது


தாசேக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாபுடின் யய்ஹா இளம் பிள்ளைகளை பற்றிய  கூற்று ஏற்கக்கூடயது அல்ல. 9 இருந்து 12 வரை  உள்ள பெண் பிள்ளைகளை கல்யாணத்திற்கு  உடல் ரீதியாக தயாராகி விட்டதாக பேசிய ஷாபுடினை பித்து பிடித்த கூற்று  என்று வர்ணித்தார், அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் சுராய்டா கமாருடின்.

முதலில் ஷாபுடின் வயதுக்கு வராத இளம் பெண்களின் வாழ்வில் நடக்கும்  இயல்பான உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி  இல்லை என்றால் கருத்து கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பதிவு செய்யப்பட்ட பல சம்பவங்களில் இந்த  இளம் பெண்கள் தங்களின் பெற்றோர்களின் கட்டாயத்தாலே இளம் வயதில் திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்திருக்கின்றனர்.

 

 

ஒரு முன்னாள் நீதிபதியான ஷாபுடின் பேச்சு கேவலமான சிந்தனைகளும் செயல்பாடுகளையும் கொண்டவராக சித்தரிக்கிறது. பின் நோக்கில் பார்க்கும் பொழுது இவரின் தீர்ப்புகளும் நியாயமாக  இருந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது.

கற்பழித்த காமுகனே பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்வதால் சமுதாயப் பிரச்சனை தீர்ந்து விடாது. இந்த பச்சிளம் சிறுமிகள்  எதிர் நோக்கிய கொடுமைகளை காமுகனை திருமணம் செய்த பிறகு தினமும் சித்திரவதையை அனுபவிக்க வேண்டுமா?

 

* சுராய்டா கமாருடின் அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் நீதி கட்சி யின் மகளிர் தலைவி ஆவார் 


 


Pengarang :