MEDIA STATEMENT

அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் குறைக்கப்பட வேண்டும் – மலேசியர்களுக்கு முதன்மை அளிக்கப்பட வேண்டும்

கோலா லாங்காட் – நாட்டுக்குள் கொண்டு வரப்படும் அந்நிய நாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு இஃது மலேசியர்களுக்கு பெரும் ஐயத்தையும் சிரமத்தையும் ஏற்படுத்தி வருவதாக கோலா லாங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹமிட் நினைவுறுத்தினார்.

நாட்டுக்குள் 1.5 மில்லியன் வங்காளதேச ஊழியர்களை கொண்டு வருவது குறித்து கடந்தாண்டில் வெளியான தகவல்கள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதையும் நினைவுக்கூர்ந்த அவர்  இதனால் மலேசியர்கள் மத்தியில் பயமும் வெறுப்பும் ஆட்கொண்டதையும் சுட்டிக்காண்பித்தார்.

கடந்தக்காலங்களில் அந்நிய தொழிலாளர்கள் தோட்டத்தொழில் மற்றும் கட்டுமானத் தொழில்களில் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்ட நிலை கடந்து தற்போது வர்த்தகம் மற்றும் சேவைத்துறைகளிலும் அவர்கள் ஆளுமை செலுத்த தொடங்கி விட்டனர்.இது மலேசிய தொழிலாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதோடு சமானிய மக்கள் மற்றும் நாளைய பட்டதாரிகள் மத்தியிலும் பெரும் கேள்வியினை எழுப்பியுள்ளது எனலாம்.

இதற்கிடையில்,அந்நிய நாட்டு தொழிலாளர்களை தருவிப்பது தொடர்பிலான “லேவி” என சொல்லப்படும் வேலை அனுமதி சான்றிதழ் வழங்கும் சேவையில் நாட்டின் அமைச்சர் ஒருவரின் குடும்ப உறுப்பினர் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இது அரசியல் பலத்தால் மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகவே கருதப்படும் என்றார்.

மலேசியர்கள் நாட்டிலுள்ள 3டி என சொல்லப்படும் அழுக்கு,சாத்தியமற்ற மற்றும் ஆபத்தான வேலைகளை செய்ய முன் வருவதில்லை என கூறப்படுவது வெறும் கற்பனையே எனவும் கூறிய அவர்  மலேசியர்கள் வேலையை தேர்வு செய்வதில் அதிகமான தேர்வுகளை முன்னெடுப்பதாகவும் கூறப்படுவதும் ஏற்புடையதல்ல என்றார்.

 

 

நடப்பியல் சூழலில் மக்களுக்கு பெரும் அழுத்தமாய் அமைந்திருக்கும் பொருளாதார சூழலுக்கு ஏற்ற ஊதியம் உறுதி செய்யப்பட்டால் மலேசியர்கள் எந்த நிலையிலான வேலையையும் செய்ய தயாராக உள்ளனர் என்பதுதன் இயல்பியல் உண்மை.அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை காட்டிலும் மலேசியர்கள் அதிகமான செலவினங்களை சமாளிக்க வேண்டியுள்ளதையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

ஆனால்,அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் 8 மணி நேரத்திற்கும் அதிகமாய் குறைந்த வருமானத்திற்காக கட்டாயம் உழைக்க கூடிய சூழல் இருப்பத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட அவர் அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் கூட்டமாய் ஒரு வீட்டில் தங்ககூடிய நிலையில் மலேசியர்கள் அவ்வாறு இருத்தல் சாத்தியமற்றது.

மலேசியர்களை அந்நிய நாட்டுத் தொழிலாளர்களோடு ஒப்பிடுவது என்பது சாத்தியமற்றது.மலேசியர்களுக்கும் அந்நிய நாட்டவர்களுக்கும் பெரும் இடைவெளியிலான வேறுபாடுகள் இருப்பதையும் நாம் உணர வேண்டும் என்றார்.

இதற்கிடையில் எண்ணெய் மற்றும் வாயூ தொடர்பிலான சவால் மிக்க வேலைகளில் மலேசியர்கள் அசாட்டாக ஈடுப்பட்டு வருவதையும் நினைவுக்கூர்ந்த அவர் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மலேசியர்கள் சிங்கப்பூருக்கு பெரும் சவால் மிக்க தொழிலுக்காக செல்கிறார்கள்.இந்நிலையை பார்க்கும் போது மலேசியர்கள் சோம்பேறிகள்,கடினமான வேலையை செய்ய மாட்டார்கள்,ஆபத்தான வேலைக்கு அச்சம் கொள்கிறார்கள், அவர்கள் வேலை செய்ய முன் வருவதில்லை என்பதெல்லாம் உண்மையாய் இருக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

மலேசியர்கள் சில குறிப்பிட்ட துறைகளில் வேலை செய்ய முன் வராதமைக்கு உழைப்பு ஏற்ற ஊதியம் இல்லாமையே என்றும் நினைவுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் மலேசியர்கள் மீது திணிக்கப்படும் தவறான பார்வைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

 

அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை கொண்டு வருவதாக முதலாளித்துவங்கள் தொடர்ந்து மலேசிய தொழிலாளர்களை தவறாக சித்தரிப்பது அர்த்தமற்றது எனவும் கூறிய அவர் குறைந்த சம்பளத்திற்கு அதிகமான வேலையை செய்வதற்காக அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை தருவிக்க மலேசியர்கள் மீது இல்லாத ஒன்றை உருவகப்படுத்துவது அநாவசியமானது என்றும் எச்சரித்தார்.

நடப்பில்,நாட்டில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 500 ஆயிரமாக அதிகரித்து வரும் வேளையில் தொடரும் இப்பிரச்னைக்கு அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் விவேகமாய் கையாள வேண்டும் எனவும் நினைவுறுத்தினார்.இப்பிரச்னைக்கு தீர்வு காண தேசிய முன்னணிக்கு நேரம் நெருங்கி விட்டதாகவும் கூறினார்.

இதற்கிடையில்,எந்தவொரு சட்டப்பூர்வமான சான்றையும் கொண்டிருக்காத அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை அடையாளம் கண்டு  அவர்களை தத்தம் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையினை  குடிநுழைவு இலாகா முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இந்த விவகாரத்தில் அம்னோ தேசிய முன்னணி விவேகமாக செயல்படா விட்டால் நாட்டின் பொது தேர்தலில் அந்நிய நாட்டவர்கள் வாக்களிக்கும் சூழலையும் தடுத்திடவும் முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை குறைக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.மலேசியர்களுக்கு முதன்மை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது என்றும் விவரித்த அவர் எதிர்கட்சி கூட்டணியில் நாட்டில் நிலவும் இப்பிரச்னைக்கு விவேகமான முறையில் கையாளுவது குறித்து ஆக்கப்பூர்வ சிந்தனையும் கருத்தினை முன் வைக்க அதன் தலைவர்கள் முன் வர வேண்டும் எனவும் டத்தோ அப்துல்லா சானி அப்துல் ஹமிட் கேட்டுக் கொண்டார்.

 

 

 


Pengarang :