PBTSELANGOR

பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் நடமாடும் சேவை முகப்பிடம்

ஷா ஆலாம் – மக்களின் வசதிக்கும் அவர்களின் ஆக்கப்பூர்வ பயன்பாட்டுக்கும் வழிகோலும் வகையில் பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகம் நடமாடும் கட்டண சேவை முகப்பினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த நடமாடும் சேவை முகப்பின் மூலம் மக்கள் தங்களின் கட்டணங்களை விவேகமான முறையிலும் எந்தவொரு அலச்சலும் சிரமமும் இல்லாமல் தங்களின் கட்டணத்தை செலுத்துவதற்கு இஃது வழிகோலும் என்று அதன் பொது தொடர்பு அதிகாரி  சைனுன் ஷக்காரியா குறிப்பிட்டார்.

பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் தலைமையகத்தில் தங்களின் கட்டணத்தை செலுத்துவதற்கு அதிக நேரம் காத்திருக்காமல் மிகவும் சுலபமாய் தங்களின் கட்டணத்தை செலுத்துவதற்கு இந்த நடமாடும் கட்டண சேவை முகப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஏப்ரல் மாதம் வரையில் அமலில் இருக்கும் இந்த சேவையினை மக்கள் பயன்படுத்திக் கொள்ள SD 12/1 (berhampiran McDonald’s dan Mobil), SS24, Taman Megah, PJU 10, Damansara Damai dan Taman Datuk Harun (berhampiran kedai pakaian Kawanku dan Restoran Nasi Kandar Pokok Kelapa) ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் நடமாடும் சேவை முகப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

இது தொடபிலான மேல் விவரங்களுக்கு 03-79563544 -203/208 எண்ணிலும்   03-79582695 தொலைநகல் எண்ணிலும் தொடர்புக்கொண்டு விளக்கம் பெறலாம்.

 

 

 

 


Pengarang :