SELANGOR

கோம்பாக் வட்டார மக்களுடன் மந்திரி பெசார் காலை உணவு எடுத்தார்.

செலாயாங் – சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி இன்று காலை மக்கள் சந்திப்பு நிகழ்வினை கோம்பாக் வட்டாரத்திற்கு மேற்கொண்ட வேளையில் அங்குள்ள மக்களோடு காலை உணவை எடுத்தார்.

பத்து கேவ் எம்பிஎஸ் பிங்கிரான் அங்காடி உணவகத்திற்கு வருகை புரிந்த மந்திரி பெசார் அங்கிருந்த மக்களோடு கைகோர்த்து அவர்களின் நலன் விசாரித்த வேளையில் மக்களோடு மக்களாய் அமர்ந்து அவர் காலை உணவையும் எடுத்தார்.

மக்கள் தங்களுக்கு தேவையான காலை உணவினை  அங்கிருந்த 20 உணகங்களில் ஆர்டர் செய்து உண்டு மகிழ்ந்த வேளையில்  அவர்களோடு மந்திரி பெசாரும் உணவு உண்டார்.

 

 

 

mb sarapan

மந்திரி பெசாருடன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களான டத்தோ டாக்டர் இஸ்கண்டார் அப்துல் சமாட் ,அமிருடின் சஹாரி,டாக்டர் டரோயா ஹல்வி மற்றும் ஷாய்டி அப்துல் தலிப் ஆகியோரும் மந்திரி பெசாருடன் உடன் இருந்த வேளையில் இங்குள்ள  பிங்கிரான் பத்து கேவ் அடுக்குமாடி வீட்டில் மாநில  அரசாங்கத்தின் பரிவு மிக்க திட்டமான “பெடுலி ராக்யாட்” திட்டத்தை மந்திரி பெசார் தொடக்கி வைத்தார்.
mb sarapan 3 mb sarapan 2

 


Pengarang :