NATIONAL

பாக்காத்தான் தொழிலாளர்களை பாதுகாக்க நான்கு விஷயங்களில் கவனம் செலுத்தும்

ஷா ஆலம், மே 1:

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி நான்கு விஷயங்களில் கவனம் செலுத்தி சக்தி வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கும் என்று 2017 தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தொழிலாளர் நலன்களை பாதுகாக்க நான்கு விஷயங்களானது; வாழ்க்கை செலவீனங்கள்  அதிகரிப்பு, இளையோர் வேலையின்மை குறைத்தல், பகுதி நேர தொழிலாளர் நலன்களை பாதுகாத்தல் மற்றும் வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர் நலன்களில் அக்கறை செலுத்துதல் போன்ற அனைத்திலும் கவனம் கொள்ளப் படும் என்று தெரிவித்துள்ளது.

”   பாக்காத்தான் மத்திய அரசாங்கம் அமைக்கும் சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியை நீக்கப்படும், ஏனெனில்  இவ்வரி மக்களை கொடுமைப் படுத்துகிறது குறிப்பாக குறைந்த வருமானம் பெறுபவர்கள் பெரும் சுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர். முதலாளித்துவ வணிகத்தை ஒழிக்கவும் பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தும்  ஆரோக்கியமான போட்டியிடும் தளமாக மாறி அரிசி, டோல் சாலைகள், தொலைதொடர்பு சேவை மற்றும்  இணையச் சேவை அனைத்தும் நியாய விலையில் கிடைக்கும்,” என்று கூட்டறிக்கையில் அறிவித்துள்ளது.

mou-pakatan1

 

 

 

 

 

பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தனது தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட செய்தியில் கெஅடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில், ஜசெகவின் லிம் குவான் எங், அமானா சார்பில் மாட் சாபு மற்றும் பெர்சத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூட்டாக சேர்ந்து வெளியிட்டனர்.

நாட்டின் தலைமைத்துவத்தை கையில் எடுக்கும் போது அனைத்து மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் நடப்புக்கு வரும் என்று பாக்காத்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Pengarang :