NATIONAL

கெல்ஐஏ இரண்டாவது ஓடும் தளம் எம்எச்726 தரையிறங்கும் பொது ஏற்பட்ட சக்கர கோளாறு காரணமாக மூடப்பட்டது

ஷா ஆலம், மே 2:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கெல்ஐஏ) இரண்டாவது ஓடும் தளம் மலேசியா விமான நிறுவனத்தின் எம்எச் 726-வின் சக்கர காற்று கசிவினால் மூடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம்  ஊடகச் செய்தியில், ஜாகார்தாவில் இருந்து வந்து காலை 7.13  தரையிறங்கிய விமானத்தின் இரு சக்கரங்களும் காற்றின்றி காணப்பட்டதாக கூறியது.

”   ஓடும் தளம் 2 அறிவிக்கும் வரை மூடப்படும்,” என விமான நிலையம் கூறியது.

பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் உடனடியாக பேருந்து சேவை மூலமாக விமான முனையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர். பயணிகளின் சாமான்களும் பேருந்து மூலம் அனுப்பப்பட்டது.

”   விமான நிறுவனம்  இந்த சம்பவத்தை விசாரணை நடத்தும் என்றும் குறிப்பாக சம்பவ காரணம் கண்டு பிடிக்கப்படும்,” என்று மாஸ் தனது  அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 


Pengarang :