ECONOMYMEDIA STATEMENT

கியூபெக்ஸ் என்னும் அரசு பணியாளர்கள் சங்கம் சிலாங்கூர் மத்திய அரசுடன் இணைந்து  ஊழியர் சம்பளத்தை உயர்த்துவதை வரவேற்கிறது

ஷா ஆலம், மே 4: சிலாங்கூர் பொதுச் சேவை ஊழியர் சங்க காங்கிரஸ் (கியூபெக்ஸ்) மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களும் 2024 டிசம்பர் 1 முதல் சம்பள உயர்வை அனுபவிப்பார்கள் என்று அறிவித்த டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தது.

சிலாங்கூர் மாநில (கியூபெக்ஸ்) தலைவர், இந்த அறிவிப்பு மடாணி அரசாங்கத்தின் அங்கீகாரம், பாராட்டு மற்றும் நம்பிக்கை, தேச அரணின் முக்கிய தூணாக விளங்கும் அரசு ஊழியர்களின் திறனுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார்.

“12 வருடங்களாக சம்பள உயர்வு கிடைக்காத அரசு ஊழியர்களின் நலனுக்கான  அங்கீகாரத்தை வழங்க உறுதுணையாக இருக்கும்   மாநில அரசின் உறுதியையும் நிலைப்பாட்டையும்  காட்டுகிறது.

“இது முழு அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் மக்களுக்கு சிறந்த சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு எங்களை நேரடியாக ஊக்குவிக்கிறது” என்று சுல்கிப்லி முகமது கூறினார்.

கடந்த வெள்ளியன்று, சிலாங்கூர் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பள உயர்வை 13 சதவீதத்திற்கும் அதிகமாக மத்திய அரசு வழங்குதலுக்கு ஏற்ப  ஒருங்கிணைக்கும் என்று அமிருடின் அறிவித்தார்.

இந்த அதிகரிப்பைத் தொடர்ந்து தற்போது உள்ள நிதி ஏற்பாடுகளை ஒருங்கிணைக்க தமது தரப்பு  உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார் அமிருடின்.

இதற்கிடையில், 2025 பட்ஜெட்டின் போது பாராளுமன்றத்தில்  அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு மீது  தனி வாக்கெடுப்பு கோரி  அதனை தோற்கடிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் முயற்சிகள் குறித்து சங்கம் ஏமாற்றமடைந்ததாக சூல்கிப்லி கூறினார்.

“அந்த நடவடிக்கை மிகவும் தீவிரமானது மற்றும் ஏமாற்றமளிக்கிறது, மேலும் அது பிரதிநிதிக்கும் மக்களின் நல்வாழ்வை விட அரசியல் நலன்கள் முக்கியமாக அவர்கள் கருதுவதை தெளிவாகக் காட்டுகிறது.

”  கியூபெக்ஸ் சிலாங்கூர்  இந்தச் செயலைக் கண்டிக்கிறது மற்றும் அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தும் முயற்சிகளை முறியடிக்க எத்தணிக்கும் அரசியல் தலைவர்களை நிராகரிக்குமாறு அனைத்து அரசு ஊழியர்களையும் கேட்டுக்கொள்கிறது” என்று அவர் கூறினார்.

முன்னதாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தற்போதைய பொருட்களின் விலை உயர்வால் எந்த அர்த்தமும் இல்லை என்று மே 2 ஆம் தேதி PN நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகங்களில் செய்தி வெளியிட்டார்.

அதற்கு முன், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பள உயர்வை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்தால், PN அதை நிராகரிப்பது போல் சித்தரிக்கப்பட்ட இந்த அதிகரிப்பின் காலம் குறித்து கேள்வி எழுப்பும் வீடியோ வைரலாக பரவியது.

எவ்வாறாயினும், பரப்பப்பட்ட காணொளி முழுமையற்றது என்றும், பிஎன் மீதான அரச ஊழியர்களின் பார்வையை  சிதைக்கும் வகையில் ‘தீங்கிழைக்கும் நோக்கமுடன் அது திருத்தப் பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.


Pengarang :