MEDIA STATEMENT

பிபிஆர் அடுக்குமாடி மக்கள் முறையான திட்டமிடல் இல்லாததால் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்

கோலாலம்பூரில் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மக்கள் மோசமான திட்டமிடல் காரணமாக பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்கிறது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடமைப்பு திட்டமாக இருந்தாலும், தரமில்லாத மலிவான முறையில் கட்டப்பட்ட கட்டிடங்கள் நீண்டகால அடிப்படையில் மக்களுக்கு பயன்படும் வகையில் அமையும் வேண்டும்.

கோலாலம்பூர் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பில் குறிப்பாக தித்திவங்சா பகுதியில் கார் நிறுத்துமிடம் பற்றாக்குறை அதிக அளவில் ஏற்படுவதாகவும், பெரும்பாலும் இரண்டாக கார் நிறுத்திவிட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது.

ஆபத்தான வேளையில் தீயணைப்பு வண்டி, ஆம்புலன்ஸ் போன்றவை உதவ முடியாத சூழ்நிலை உருவாகும் நிலையில் மக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

????????????????????????????????????

 

 

 

 

 

 

 

மேலும், பல பிபிஆர் வீடமைப்பு திட்டங்கள் சரியான முறையில் பராமரிக்க படவில்லை. பந்தாய் பெர்மாய் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. தீயணைப்பு பீலி மற்றும் தீயை  அணைக்கும் கருவிகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ள நிலையில் இருக்கிறது. அப்படி தீ விபத்து ஏற்பட்டால் என்ன செய்வது என்று புரியாமல் மக்கள் மிகவும் இன்னல்கள் எதிர் நோக்குவதாக விவரித்தார்.

நாம் அனைவரும் தொடர்ந்து இதேபோல சேயல்பட்டால் எதிர்காலத்திலும் இதுபோன்ற நிலைதான் நமது  எதிர்கால சமூகமும் இருக்கும்  என்று உணர வேண்டும்.

டாக்டர் ஹத்தா ரம்லி

கூட்டரசு பிரதேசத்தின் அமானா கட்சியின் தலைவர்


Pengarang :