RENCANA PILIHANSELANGOR

வான் அஸிஸா: கெஅடிலான் உடனான உறவை துண்டித்தாலும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் பாதிக்காது

ஷா ஆலம், மே 12:

பாஸ் கட்சியின் ஷுரா உலாமாக் பேரவையின் கெஅடிலான் கட்சியுடனான உறவைத் துண்டிக்கும் முடிவு சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை பாதிக்காது என்று கெஅடிலான் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார். சிலாங்கூர் மாநில அரசாங்கம் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் கீழ் தொடர்ந்து மாநில மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் மக்களின் செழுமையான திட்டங்கள் வெற்றி அடைய பாடுபடுவோம் என்று விவரித்தார்.

மேலும் கூறுகையில், இந்த புதிய அரசியல் திருப்பம் மாநில அரசாங்கத்தை கொஞ்சமும் பாதிக்காது ஏனெனில் மாநில மக்களின் அமோக ஆதரவு நிரந்தரமாக இருப்பதாக கெஅடிலான் தலைவர் வான் அஸிஸா கூறினார். கெஅடிலான் பாஸ் கட்சியின் உயரிய தலைமைத்துவத்தின் முடிவை திறந்த மனதுடன்  ஏற்றுக் கொள்வதாகவும், ஆனாலும் இந்த நீண்டகால நட்பை தொடர பல முயற்சிகள் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

wan-azizah

 

 

 

 

”   கெஅடிலான் 1999-இல் இருந்து தொடங்கிய அரசியல் உறவை எந்த காலத்திலும் பாஸ் கட்சிக்கு துரோகம் இழைத்தது கிடையாது. கடந்த ஏப்ரல் 8, 2017-இல் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் ஷாரியா நீதி மன்றங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார். இதுவே கெஅடிலான் கட்சியின்  அதிகாரப்பூர்வ நிலையாகும்,” என்று தனது அறிக்கையில் கூறினார்.

வான் அஸிஸா கூறுகையில், கெஅடிலான் தொடர்ந்து மற்ற அரசியல் கட்சிகளுடன் ஒன்றிணைந்து புத்ராஜெயாவை கைப்பற்ற சிறந்த வியூகம் அமைக்கும் என்று தெரிவித்தார். இதனிடையே கெஅடிலான் கிளாந்தான், பினாங்கு மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்கங்களை பாதுகாக்க போராடும்.

 


Pengarang :