Empangan Sungai Selangor
SELANGOR

ஏழு அணைகளில் நீரின் அளவு 97% மேல் உள்ளது

ஷா ஆலம், மே 13:

சிலாங்கூரில் உள்ள அனைத்து அணைகளிலும் நீரின் அளவு அதிகமாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு பயனீட்டாளர்களுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதாகவும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம்  (லுவாஸ்) தெரிவித்துள்ளது. இன்று காலை 8 மணிக்கு சிலாங்கூரில் ஏழு அணைகளிலும் நீரின் அளவு அதிகமாக இருப்பதாக  அல்லது 97%-க்கு மேல் உள்ளதாக லுவாஸ் அறிவித்துள்ளது.

சிலாங்கூர் ஆற்றின் அணை 100% அல்லது 230 கன மீட்டரிலும் செமினி அணையில் 100.32% அல்லது 59.26 கன மீட்டர், லாங்காட்  (34.10 கன மீட்டர்) சுபாங்  ஏரியின் நீர் மட்டம்  42.1 கன மீட்டராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சுங்கை லாபூ நீர் தேக்கி குளத்தில் 99.62% அளவை எட்டியது எனவும் சுங்கை திங்கி அணையில் 97.03% அல்லது 111.10 கன மீட்டர் நீர் மட்டம் இருப்பதாக லுவாஸ் தெரிவித்துள்ளது.

கிள்ளான் கேட்ஸ் அணையின் நீர் மட்டம் 97.30% அடைந்த நிலையில் பத்து  அணை 74.92% அல்லது 23.95 கன மீட்டர் அளவில்  உள்ளதாகபதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :