SELANGOR

பன்டிக்கார், சிலாங்கூர் மாநில சபாநாயகரை புகழ்ந்தார்

ஷா ஆலம், மே 13:

சிலாங்கூர் மாநில சபாநாயகர் ஹானா இயோ அர்ப்பணிப்புடன் தனது கடமையை நிறைவேற்றுவதாக நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பன்டிக்கார் அமின் மூலியா பாராட்டினார்.  ஹானா, தனது கடமையை பொறுப்புள்ள முறையில் நிர்வகிக்கும் திறன் சிறந்த தலைமைத்துவத்தை காட்டுவதோடு நம்பகத்தன்மையை ஏற்படுத்தி வருகிறது என்றார் அவர்.

”   மாண்புமிகு ஹானா இயோவிற்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மலேசியாவிலே முதல் பெண் மற்றும்  இளம் வயதில் சபாநாயகர்  ஆன பெருமை ஹானாவை சென்றடைவது மட்டுமில்லாமல் சிறந்த சேவை ஆற்றும் முறை பாராட்டவேண்டும். இது சரித்திரத்தில் நீங்கா இடம் பெற வேண்டும். இந்த ஆண்டில் சிறந்த சட்ட மன்ற கூட்டங்களை நடத்தினார், ” என்று கூறினார் கொன்கோட் தங்கும் விடுதியில் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கூறினார்.

Hannah Yeoh

 

 

 

 

 

 

 

 

ஹானா கடந்த 21 ஜுன் 2013-இல் இருந்து சிலாங்கூர் மாநில பாக்காத்தான் அரசாங்கத்தின் கீழ் சிலாங்கூர் மாநில சபாநாயகராக பதவி ஏற்று பணியாற்றி வருகிறார். இவரின் பதவி காலத்தில் பல்வேறு புதிய வழிமுறையை பின்பற்றி சட்ட மன்றத்தில் மக்களாட்சி தத்துவத்தை மேலோங்கச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. எல்லா சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் பேசும் உரிமை கொடுத்து தேசிய முன்னணி சட்ட மன்ற உறுப்பினர்களும் மதிக்கத்தக்க சபாநாயகர் ஹானா இயோ ஆவார். இதில் மிகவும் சிறந்த வழிமுறையாக எதிர்க்கட்சி தலைவரை பொதுக்கணக்கு குழு தலைவராக, காமன்வெல்த் நாடுகளின் முன்மாதிரியை பின்பற்றியது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பவருக்கு வசதிகள், படிகள் மற்றும் போக்குவரத்து சேவை அனைத்தும் வழங்கி சட்டமன்றம் சிறந்த செயல்பாடுகள் கொண்டிருக்க வழி வகுத்தது ஹானா இயோ விற்கு புகழ் சேர்த்தது  எனலாம்.

இதனிடையே, சிலாங்கூர் மாநில சட்டமன்றம், இந்த  ஆண்டின் மாநாட்டை ஏற்று நடத்தியது. இதில் நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் மற்றும் எல்லா சட்டமன்றங்களின் சபாநாயகர்கள் மற்றும் துணை சபாநாயகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு மேன்மை தங்கிய சிலாங்கூர் அரசர், சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். அவரோடு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கலந்து சிறப்பித்தார்.

=EZY=


Pengarang :