NATIONAL

மலேசியா ‘ரேன்ஸம்வேர்’ பாதிக்கப்படும் நாடுகள்

கோலாலம்பூர், மே 13:

மலேசியா ‘ரேன்ஸம்வேர்’ வைரஸ் என்ற இணையதள கிருமியால் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டாலும்  பிரிட்டன் போல மோசமாக பாதிப்பு ஏற்படாது என்று மலேசிய பல்ஊடக மற்றும் தொடர்பு ஆணையத்தின்(எஸ்கேஎம்எம்), பாதுகாப்பு மற்றும் அமலாக்க பிரிவின் தலைமை அதிகாரி, ஸுல்கார்னயன் முகமட் யாசின் தெரிவித்தார். தங்களின்  ஆய்வின் படி மலேசியாவிலும் இந்த வைரஸ் தாக்குதல் நடத்தும் என கூறினார்.

”   ஆரம்ப கட்ட மதிப்பீட்டின் படி, நமது நாட்டில் ‘ரேன்ஸம்வேர்’ வைரஸ் தாக்குதல் நடந்திருக்கிறது. சிலர் இந்த வைரஸ்னால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்,” என்று எஸ்ட்ரோ அவானி செய்தி வெளியிட்டுள்ளது

மேலும் கூறுகையில், எஸ்கேஎம்எம் தொடர்ந்து தங்களின் இணைய அமைப்பில் எச்சரிக்கையாக இருக்கும் என்று ஸுல்கார்னயன் தெரிவித்துள்ளார். மேலும் ‘ரேன்ஸம்வேர்’ வைரஸ் மிகக் கடினமான செயல்பாடுகள் கொண்ட ஒரு வைரஸ் ஆகும். இதற்கு சிறந்த முறை தற்காப்பு அரணை மேம்படுத்திக் கொள்வதே ஆகும்.

 

ஸுல்கார்னயன் தொடர்ந்து விளக்கம் அளிக்கையில், இந்த வைரஸ் தாக்குதல் நடத்தும் போது கோப்புகள் மற்றும் தரவுகள் அனைத்தும் மூடிக் கொள்ளும் என்று எஸ்ட்ரோ அவானி செய்திக்கு தெரிவித்தார்.


Pengarang :