SELANGOR

பசுமையான செயல்பாடுகள் அடிப்படையில் எம்பிஎஸ்ஏ ‘கிப்ஃட்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது

ஷா ஆலம், மே 16:

ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) இன்று ‘பாலர்பள்ளியில் பசுமை செயல்பாடுகள்’ (கிப்ஃட்) என்ற திட்டத்தை 200 பாலர்பள்ளி தொழில் முனைவர்களை கொண்டு தொடக்கி உள்ளது. ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் துணை மேயர் ஷுக்ரி முகமட் ஹாமின் கூறுகையில், இந்த திட்டம் சிறுவர்களை பாலர்பள்ளியிலே அன்றாட வாழ்க்கையில் பசுமை நிற மரங்களின் நன்மைகளை பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப் பட்டது என்று விவரித்தார்.

மேலும் அவர், இது ‘சுத்தமான பகுதி’ மற்றும் ‘குறுகிய சுத்தமான பகுதி’ போன்ற நடவடிக்கைகளின் தொடர்ச்சி என்றும் ஷா ஆலம் மாநகராட்சி 2030-இல் கார்பன் குறைந்த நகராக இருக்கும் என்று தெரிவித்தார்.

MBSA GIFT (1)

 

 

 

 

” நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு சிறார்களை, சுற்று சூழல் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவரங்கள் விளக்கப் படவேண்டும்,” என்று விஸ்மா எம்பிஎஸ்ஏ-வில் நடைபெற்ற  ‘கிப்ஃட்’ பிரச்சார தொடக்க விழாவில் இவ்வாறு கூறினார்.


Pengarang :