ANTARABANGSA

முதல் நாள் நோன்பு ராணுவ பீரங்கி முழக்கத்துடன் மராவியில் தொடங்கியது

மணிலா, மே 28:

தென் மராவி நகரின் முஸ்லிம் பொது மக்கள் நோன்பு மாதத்தின் முதல் நாள் பிலிப்பைன்ஸ் ராணுவ பீரங்கி முழக்கத்துடன் ஆரம்பித்தனர். மௌதே தீவிரவாதிகளின் கூடாரமாக மராவி நகர் மாறியதாக கூறி ராணுவம் குவிந்தது குறிப்பிடத்தக்கது. பீரங்கிகளின் தாக்குதல் முழக்கங்கள் மராவி நகரின் ஒவ்வொரு மூலையிலும் கேட்டுக் கொண்டே இருந்தது. மணிலாவில் இருந்து 800 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மராவி நகரை கடந்த ஐந்து நாட்களாக ராணுவம் முற்றுகை இட்டுள்ளது என்று ஏஜென்சி கூறியது.

ராணுவ ஆணையர் லெப்டினன்ட் ஜெனரல் கார்லீதோ கால்வேஸ் நோன்பு மாத முதல் நாளில் சண்டை ஏற்படுத்தியதிற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

”   நாங்கள் இந்த இடத்தை கூடிய விரைவில் சுத்தம் செய்து விடுவோம். இதற்கு ராணுவ பலத்தை அதிகரித்து தீவிரவாதிகளை பின்வாங்க வைத்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்,” என்று கூறினார்

லானாவ் டில் சூர் மாகாணத்தின் துணை கவர்னர் கூறுகையில் கிட்டத்தட்ட 200,000 மராவி மக்களில் 90% நகரில் இருந்து போரின் காரணமாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் என்று விவரித்தார்.

”   நோன்பு மாதத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஆனால் இந்த போரினால் மிக சோகமாக ரமலான் உணர்வே இல்லாமல் செய்து விட்டது. தீவிரவாதிகளின் போராட்டம் என்னவென்று தெரியவில்லை,” என்று துணை கவர்னர் கூறினார்.

பிலிப்பைன்ஸ் அதிபர் டுதேர்தே, மௌதே தீவிரவாதிகளை உடனடியாக சரண் அடைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் இரத்த காடாக மாற்றம் கண்ட மராவி நகரின் அமைதிக்கு வித்திடும் என்றும் இதனால் இந்த வட்டாரத்தில் பாதுகாப்பு மிரட்டல் ஏற்பட்டுள்ளது என்று அதிபர் தெரிவித்தார்.


Pengarang :