SELANGOR

எல்ஆர்டி3: வசதிகள் கண்டு பெருமிதம், வியாபாரிகளை புறக்கணிக்கக் கூடாது

கிள்ளான், மே 29:

ஜாலான் மேருவில் அமைந்துள்ள  கிள்ளான் வியாபார மையத்தின், புளோக்  சி வியாபாரிகள் இலகு இரயில் திட்டம் 3 (எல்ஆர்டி) வழி விடும் வகையில் புதிய இடத்திற்கு மாற்றப் படுவார்கள் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் கூறினார். கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே), வியாபாரிகள் தங்களின் வாணிபத்தை தொடர்ந்து ஈடுபட திட்டமிடுகிறது என்று விவரித்தார். புளோக் சி, பிராசாரானா மலேசியா பெர்ஹாட் கையகப்படுத்தும் என்று கூறினார்.

”   புளோக் சி வணிகர்கள் மாற்றப்படுவார்கள், ஆனால் அதே வியாபார மையத்தின் வளாகத்தில் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள்,” என்று கார்னிவல் பெடுலி சேஹாட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கூறினார்.

மேலும் கூறுகையில், இரண்டு எல்ஆர்டி நிலையங்கள் ஜாலான் மேருவில் முறையாக கிள்ளான் வியாபார மையத்திலும் மற்றும் மலேசிய வாணிப வாரியத்திலும் அமைக்கப்பட திட்டமிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Teng Chang Kim

 

 

 

 

 

இதனிடையே, மலேசிய வாணிப வாரியத்தின் அருகாமையில் உள்ள வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற வேளையில் முடிவுகள் இன்னும் பேச்சுவார்த்தை நிலையிலே இருப்பதாக கூறினார்.


Pengarang :