MEDIA STATEMENT

இறக்குமதி செய்யப்படும் வாக்காளர்கள் மற்றும் ராணுவ வீரர்கள், பிஎன் நெருக்கடி நிலை?

வெளியூரில் இருந்து மற்றும் இறக்குமதி செய்யப்படும் வாக்காளர்கள் குறிப்பாக ஜோகூர், சிகாமட் நாடாளுமன்ற தொகுதியில் அதிக அளவில் பெருகி வருகிறது மிகவும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. பெங்கலான் பெலூரு ராணுவ முகாம் சிகாமட் நாடாளுமன்ற தொகுதியில் புதிதாக கட்டுமான பணியில் உள்ளது. இந்த ராணுவ முகாம் 1500 இருந்து 2000 வரை ராணுவ வீரர்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது மேற்கண்ட ராணுவ வீரர்கள்  கூடாரம் அமைத்து தங்கிய இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் புதிய ராணுவ முகாம் இன்னும் கட்டப்பட்ட நிலையிலே இருப்பதாக தெரிகிறது. தற்போது நம்மிடையே எழும் கேள்வி மலேசிய ஆயுதப்படை (எடிஎம்) மற்றும் மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) இங்கு அமர்த்தப்படும் ராணுவ வீரர்கள் ஏற்கனவே வாக்காளர்களாக இங்கு மாற்றப்பட்டு விட்டார்களா அல்லது ராணுவ முகாம் கட்டுமான பணிகள் முடிந்தவுடன் மாற்றுவார்களா?

அப்படி இந்த ராணுவ வீரர்கள் சிகாமட் நாடாளுமன்ற தொகுதிக்கு மாற்றி இருந்தால், புதிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டுமே. மலேசிய தேர்தல் ஆணையம் கூடுதல் வாக்காளர் பட்டியல் விநியோகத் தடைஉத்தரவு அதன் சுதந்திர செயல்பாடுகள் மீது நம்பிக்கை இழந்த நிலையில் இருப்பதாக தெரிகிறது.

Datuk Seri Dr Santhara

 

 

 

 

 

 

 

மேலும் மஇகா போட்டியிடாத ஜோகூர் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களை சிகாமட் நாடாளுமன்றத்திற்கு மாற்ற ஆணை பிறப்பித்துள்ளது என்றும் இடம் மாற்றும் ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ரிம100 இருந்து ரிம200 வரை சன்மானம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்காளர்களை இடம் மாற்றும் தேசிய முன்னணியின் தேர்தல் வியூகம் அவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாக்குமா?

ஜோகூர் மாநில கெஅடிலான், மஇகாவின் தேசிய தலைவரும் சிகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் இந்த குற்றச்சாட்டு அடிப்படையில் பதில் அளிக்க வேண்டும்.

ஜோகூர் இனம், நேர்மையான தேர்தல் விதிமுறைகளின் மூலம் மலேசியா மேலும் சிறப்பாக இருக்க வழி வகுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

* டத்தோ ஸ்ரீ முனைவர் எட்மன்ட் சந்தாரா

கெஅடிலான் கட்சியின் தேசிய ஒருமைப்பாடு பிரிவு தலைவர்

 


Pengarang :