MEDIA STATEMENT

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு வெற்று வாக்குறுதிகள் கொடுக்கும் நஜிப்

நஜிப் ரசாக் தொடர்ந்து மத்திய அரசாங்கம் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை நினைவு கொள்ளும் என்று கூறியுள்ளார். இதுவரை அரசாங்கம் ஏறக்குறைய ரிம 3.28 பில்லியன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் சமூக நலத் திட்டங்களுக்கு செலவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் இப்போது எழும் கேள்வி, ஏன் 2016-இல் பல மாதங்களாக ஓய்வூதியத்தை முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கொடுக்கப்படவில்லை? உண்மையில் என்ன நடந்தது? இந்த விடயத்தில் ஆயுதப்படை சம்பளம் விவகாரம்  (யுகாட்) அல்லது ஆயுதப்படை சேமிப்பு வாரியம் (எல்திஏதி) தவறு செய்திருந்தாலும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு முறையே ஓய்வூதியத்தை பட்டுவாடா செய்யும் நடைமுறை பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக நஜிப் மற்றும் தற்காப்பு அமைச்சரான ஹிஷாமூடின் போன்ற பணக்கார வம்சாவளியினருக்கு முன்னாள் ராணுவ வீரர்களின் வாழ்க்கை சூழ்நிலை புரியும் வாய்ப்பு இல்லை.

மேலும் தற்காப்பு அமைச்சர் என்ற முறையில் எல்திஏதி மற்றும் யுகாட் நிர்வாகத்தில் ஏற்படும் கோளாறுகளை களைய தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் எதிர் நோக்கும் சிக்கல்களை தீர ஆராய்ந்து தகுந்த முறையில் தீர்வு காண வழி காண வேண்டும். இப்படி சிக்கல்கள் தொடரும் போது முன்னாள் ராணுவ வீரர்கள் மட்டுமில்லாமல் பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் கண்டிப்பாக அச்சம் ஏற்படும்.

மத்திய அரசாங்கம், நாட்டின் பாதுகாப்புக்கு தங்கள் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தை நினைவு கூறும் வகையில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஓய்வு பெற்ற காலத்தில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிலைப்பாடு, மத்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் முன்னாள் ராணுவ வீரர்கள் நிர்வாகமாக இருந்தாலும் மாநில அரசாங்கத்தின் ரிம 1 மில்லியன் நிதியை முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஹிஜ்ரா சிறுதொழில் கடனுதவி திட்டத்தில் சுலபமாக பெற வழி வகை செய்யப்பட்டது.

ஆக, பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி முன்னாள் வீரர்களை கௌரவிக்கிறது ஆனால் மத்திய அரசாங்கமோ உதாசீனப்படுத்தி வருகிறது.

* நிக் நஸ்மி நிக் அமாட்

கெஅடிலான் கட்சியின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர்

 


Pengarang :