NATIONAL

ஐந்து உள்நாட்டு பல்கலைக்கழகங்கள் 300 உலக தரவரிசையில் பட்டியல் இடப்பட்டுள்ளது

ஷா ஆலம், ஜூன் 8:

மலேசியாவின் ஐந்து உள்நாட்டு பல்கலைக்கழகங்கள் 300 உலக தலைசிறந்த தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக 2017-2018-இன் குவேக்குரேல்லி சிமோண்ட்  (குயுஎஸ்) வெளியிட்ட உலக பல்கலைக்ககழக தரவரிசையில் தெரியவந்துள்ளது.

உலக தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற பல்கலைக்கழகங்களில் மலாயா பல்கலைக்கழகம், மலேசிய புத்ரா பல்கலைக்கழகம், மலேசிய தேசிய பல்கலைக்கழகம், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் போன்றவை ஆகும்.

இந்த அடைவுநிலை மேற்கண்ட பல்கலைக்கழகங்களை உலக ரீதியில் 26,000 எண்ணிக்கையில் முதல் 300 இடங்களில் இருப்பது பெருமைமிக்க ஒன்று என்று கூறப்படுகிறது. மலாயா பல்கலைக்கழகம் 114-வது இடத்தில் 19 படிகள் உயர்ந்த நிலையில் உள்ளது. புத்ரா பல்கலைக்கழகம் 229-வது இடத்திலும், தேசிய பல்கலைக்கழகம் 230-வது இடத்திலும் உள்ளது. மேலும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 253-வது தரவரிசையிலும் மற்றும் அறிவியல் பல்கலைக்கழகம் 264-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

*தகவல் : பிஎச் ஓன்லைன்


Pengarang :