MEDIA STATEMENT

மலேசிய பல்லினத்தை மடாணி அரசு பிரதி நிதிக்கிறது

செய்தி.சு.சுப்பையா

கோல குபு பாரு.ஏப்.27- நாட்டின் நீண்ட பாரம்பரியம் பல்லின மக்கள் பிரதிநிதித்துவத்தை. தேசிய முன்னணி நீண்ட காலமாக கடை பிடிக்கிறது. ஒரு  ஒற்றுமை அரசாங்க அமைச்சரும் 

அதே போல் தான் நம்பிக்கை கூட்டணியும் பல்லின மக்களை தொடர்ந்து பிரதிநிதிக்கிறது. ஆனால் பெரிக்காத்தான் நேஷனல் அப்படி பிரதிநிதிக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். பெரிக்காத்தான் இனவாதத்தை முன்னிலைப்படுத்துகிறது. இது பல்லினம் ஒற்றுமையாக வாழும் நம் நாட்டுக்கு சரியானது அல்ல.

உலு சிலாங்கூர் நாடாளுமன்றம், உலு பெர்ணம் மற்றும் பாத்தாங் காலி சட்ட மன்றம் பெரிக்காத்தானிலிருந்து மலாய்க்காரர்கள் பிரதிநிதிக்கின்றனர். இந்த கோல குபு பாரு சட்டமன்றம் பாரம்பரியமாக சீனர்கள் பிரதிநிதியாக இருந்து வருகிறது. கடந்த பல தவணைகளாக சீனர்களே இத்தொகுதியில் போட்டியிட்டு வந்தனர்.

கடந்த காலத்தில் பெரிக்காத்தான் சார்பாக கெராக்கான் கட்சி போட்டியிட்டு வந்தது. ஆனால் இம்முறை கெராக்கானிடமிருந்து பிடுங்கி பெர்சத்து போட்டியிடுகிறது. அப்படி என்றால் பெரிக்காத்தான் பல்லின மக்களை பிரதிநிதிக்கின்றதா என்று இத்தொகுதி மக்கள் எண்ணிப் பார்த்து ஒற்றுமை வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் நிதி  அமைச்சின் முன்னாள் துணை அமைச்சரும் இந்நாள் பொதுப் பணித் துறை அமைச்சின் துணை அமைச்சருமான டத்தோ அமாட் மஸ்லான்.


Pengarang :