NATIONAL

மாடல் அழகி, 1எம்டிபி மூலம் வாங்கப்பட்ட USD8.1 மில்லியன் மதிப்பிலான நகைகளை திருப்பிக் கொடுத்தார்

ஷா ஆலம், ஜூன் 28:

முன்னாள் விக்டோரியா சிக்ரேட் மாடல் அழகியான, மிராண்டா கெர் USD8.1 மில்லியன் மதிப்பிலான நகைகளை அமெரிக்க நீதித்துறையிடம் ஒப்படைத்த செயலை மக்கள் நீதிக் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸா அன்வர் பாராட்டினார். 1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டப்பட்ட நிலையில் மிராண்டா நகைகளை திருப்பிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

நூருல் இஸா மேலும் கூறுகையில், இந்த நகைகள் 1எம்டிபி ஊழலின் கதாநாயகனான ஜோ லோ ஆஸ்திரேலியா பூர்வீகத்தை கொண்ட மிராண்டாவை கவர்வதற்காக பரிசாக வழங்கியுள்ளதாக அமெரிக்கா நீதித்துறை உறுதிப் படுத்தியது.

Nurul Izzah

 

 

 

 

 

” இந்த மாடல் அழகி  நாட்டின் ஆளும் தலைவரை விட மானமுள்ளவர். நம்மை கொள்ளை அடித்தப் பணத்தில் வாங்கியதாக கூறப்படும் வைரத்தை இந்த கொள்ளையன் திருப்பிக் கொடுக்க வேண்டும்,” என்று தமது அறிக்கையில் நூருல் இஸா அன்வர் கூறினார்.

தெ வோல் ஸ்தீரிட் ஜெர்னல் நாளிதழின் செய்தியின் அடிப்படையில் மிராண்டா கெர் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிகாரிகளிடம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திருப்பிக் கொடுத்தார் என்று தெரிவித்தது.

DoJ

 

 

 

 

இதனிடையே நூருல் இஸா பேசுகையில், அமெரிக்க நீதித்துறை கடந்த ஜூன் 16-இல் புதிதாக தொடுத்த வழக்கில் ஜோ லோ மற்றும் எரீக் தான் ஆகியோர் USD200 மில்லியன் மதிப்பிலான நகைகளை வாங்கியதாக குற்றம் சாட்டியது என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :