RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூர் மாநில நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு, ஜூலை 2-இல் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு

ஷா ஆலம், ஜூன் 30:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு எதிர் வரும் ஜூலை 2-இல் நடைபெற திட்டமிட்டு வரும் வேளையில் 60,000 வருகையாளர்களை பண்டான் இண்டா, எம்பிஏஜே திடலில் எதிர் பார்ப்பதாக மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தனது தலைமையிலான சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் பொது மக்களுக்கு பாராட்டு மற்றும் நன்றி செலுத்தும் வகையில் மிகப்பெபெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பபட்டுள்ளது என்று தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசர், மேன்மை தங்கிய சுல்தான் ஷாராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் அவர்தம் துணைவியார் தெங்கு பெர்மைசூரி நோர்ஹாசிகீன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார். திறந்த இல்ல நிகழ்வு காலை மணி 10 தொடங்கி மாலை மணி 3 மணி வரை நீடிக்கும் என்று கூறினார். மாநில அரச தம்பதியருடன் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் தமது ஆட்சிக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்பாடு செலவுகள் உயர்ந்த நிலையில் குறிப்பாக உணவுகளின் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது என்றும், 60,000 பொது மக்களை உபசரிக்க ரிம 2 மில்லியன் செலவாகும் என்று அஸ்மின் அலி உறுதிபடுத்தினார்.

இதற்கு முன்பு, மாநில நிதி அதிகாரி, டத்தோ நோர்டின் சுலைமான் மந்திரி பெசாருக்கு அளித்த விளக்கத்தில் மாநில அரசாங்கம் இந்நிகழ்ச்சிக்கு ரிம 250,000 ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் மீதி தொகையை சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் துணை நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் என்று விவரித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :