PBTSELANGOR

கிள்ளானுக்கு வருகை புரியும் ஆண்டு 2017: சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது

கிள்ளான், ஜூலை 8:

பாரம்பரிய நடைப்பாதை, அரச பொருட்காட்சி சாலை மற்றும் குவான் இன் சீன ஆலயம் போன்ற இடங்கள், சுற்றுப்பயணிகளை கவர்ந்து கிள்ளானுக்கு வருகை புரியும் ஆண்டு 2017-இன் இலக்கை அடைய முடியும் என்று கிள்ளான் நகராண்மை கழகத்தின் தலைவர் டத்தோ முகமட் யாஸிட் பீடின் கூறினார். மேலும் கிள்ளான் ஆற்றின் தூய்மையை பேணிக் காக்கவும் மற்றும் தொடர்ந்து பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து கிள்ளான் நகரை சுற்றுலா தலமாக விளம்பரப்படுத்தப் படும் என்று விவரித்தார்.

”   இதுவரை ‘கிள்ளானுக்கு வருகை புரியும் ஆண்டு 2017’ முயற்சிகள் நல்ல முறையில் வெற்றிகளை  கொடுத்துள்ளது.பாரம்பரிய நடைப்பாதை, அரச பொருட்காட்சி சாலை மற்றும் குவான் இன் சீன ஆலயம் போன்ற இடங்கள், சுற்றுப்பயணிகளை கவர்ந்து இழுக்கும். பாரம்பரிய நடைப்பாதையில் சிலரை பணியில் அமர்த்தி வரும் சுற்றுலா பயணிகளை நிர்வகிக்க ஏற்பாடு செய்து உள்ளது,” என்று தெரிவித்தார்.

 

 

 

KLANG

 

 

 

 

”   சுற்றுலா பயணிகள் தற்போது அதிகரித்த வண்ணம் உள்ளது. கிள்ளான் பல கவர்ந்து இழுக்கும் இடங்களை கொண்டுள்ளது குறிப்பாக கிள்ளான் ஆற்றின் இயற்கை அழகு கண்டிப்பாக சுற்றுலா பயணிகளை கவரும்,” என்று தாமான் பெங்கலான் பத்து, கிள்ளான் ஆற்றின் அருகாமையில் நடைபெற்ற  எம்பிகேவின் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஜிஎம் மொத்த விற்பனை மையம் பல்வேறு வியாபாரச் சலுகைகள் கொடுத்து சுற்றுலா பயணிகளை கவரும் விளம்பரங்களை செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கூறுகையில், கிள்ளான் ஆற்றில் புதிதாக மூன்று முதலைகள் குடி புகுந்து கிள்ளான் ஆற்றை தனது வசிப்பிடமாக தேர்ந்தெடுத்தது அதன் தூய்மையான நிலையை உணர்த்துகிறது என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :