SELANGOR

ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு பல்லின மக்களிடையே ஒருமைப்பாட்டை வளர்க்கும்

கிள்ளான், ஜூலை 9:

தெலுக் மெனோகன் கிராமத்தில் ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு ஷாவால் மாத உணர்வுகளோடு மிகச் சிறப்பாக நடைபெற்றது என்று ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் கூறினார். நோன்பு பெருநாள் நிகழ்வை அனைவரும் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்று விவரித்தார்.

”   இது காலங்காலமாக ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்றம்  பாரம்பரியமாக கடைபிடித்து வருகிறது. நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வு மலாய்காரருக்கு மட்டுமில்லாமல் சீன மற்றும் இந்திய சமுதாயம் இணைந்து கொண்டாடி மகிழும் தினமாக அமைந்துள்ளது. இந்த ஒற்றுமை, சிலாங்கூர் மாநில மக்களின் ஒருமைப்பாட்டை வளர்க்கும் என்றும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும்,” என்று கூறினார்.

Xavier1

 

 

 

 

 

”  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் குறிப்பாக ஏற்பாட்டு பணிகளை திறம்பட செய்த பணியாளர்களுக்கும் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறேன்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார். சுமார் 3000 வருகையாளர்கள் நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வுக்கு கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறுசுவை விருந்துடன் தலைவர்களோடு கலந்துரையாடல், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் என களைக் கட்டியது.பெடுலி சேஹாட் சுகாதார அட்டை திட்ட பதிவு மும்முரமாக நடைபெற்றது.

இதனிடையே, சேவியர் 50 பெடுலி சேஹாட் சுகாதார அட்டையை விண்ணப்பதாரர்களுக்கு கொடுத்தார். ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்றம் மிகச் சிறப்பாக வழி நடத்தப்படும் சட்ட மன்ற சேவை மையமாகவும் திகழ்கிறது என்றால் மிகையாகாது. 2008-இல் ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்றத்தில் வெற்றி பெற்ற டாக்டர் சேவியர் ஜெயக்குமார் 2013-வரை ஆட்சிக் குழு உறுப்பினராக சிறந்த சேவையை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :