SELANGOR

வெள்ளப் பிரச்சனைகளைக் வெற்றிகரமாக தீர்த்து வைக்கப்பட்டது

கிள்ளான், ஜூலை 9:

ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற தொகுதியில் வெள்ளம் தொடர்பான பிரச்சனைகளை குறுகிய காலத்தில் மக்கள் நலன் கருதி தீர்க்கப் பட்டுள்ளதாக ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார். 2008-க்கு முன் வெள்ளப் பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும், தன்னுடைய பதவி காலத்தில் தீர்க்கப் பட்டதை சாதனையாகக் தாம் கருதுவதாக கூறினார்.

”   பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகள் (ஐபிஆர்) மூலம் ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற தொகுதி மக்களுக்கு பல்வேறு வழிகளில் சேவை ஆற்றி வருவதை பலன் பெற்றவர்கள் உணர்கிறார்கள். மேலும் மாநில அரசாங்கம், வெள்ளப் பிரச்சனைகளைக் களைய பெரிய அளவிலான ஒதுக்கீடுகளை அளித்து வருகிறது. ஜாவா ஆறு, கண்டீஸ் ஆறு மற்றும் தெமெகோன் கிராமம் போன்ற பகுதிகளில் வெள்ளத்தை எதிர் கொள்ள கோன்கிரிட் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுத்து தீர்வு பிறந்தது. 2008-க்கு பிறகு இந்த தொகுதியில் கிடைத்த இமாலய வெற்றி என நான் நினைக்கிறேன். இது மட்டுமில்லாமல் தொடர்ந்து ஸ்ரீ அண்டாலாஸ் சட்ட மன்ற தொகுதி மக்களுக்கு பல்வேறு மக்கள் நல திட்டங்களை மாநில அரசாங்கம் கொண்டு வரும்,” என்று நோன்பு பெருநாள் திறந்த இல்ல நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

Xavier

 

 

 

 

 

 

இதற்கு முன்பு, வெள்ளப் பிரச்சனைகளைக் எதிர் நோக்கி வந்த இத்தொகுதி மக்கள், வெள்ள நீர் சேமிப்பு குளத்தை 19 ஏக்கரில் போதானிக் கார்டனில் நிர்மாணித்து இப்பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தாமான் ஸ்ரீ செந்தோசா, பண்டார் புத்ரி, கம்போங் ஜாவா போன்ற வீடமைப்பு பகுதியில் ஏற்படும் வெள்ளப் பிரச்சனை முற்றிலும் தீர்க்கப் பட்டது என்று கூறினால் அது மிகையாகாது.

#கேஜிஎஸ்


Pengarang :