PBTRENCANA PILIHANSELANGOR

ஜிஎஸ்டி: ரிம 105.17 மில்லியன் கோரப்பட்டது, ஆனால் ரிம 52.09 மில்லியன் மட்டுமே கிடைத்தது

காஜாங், ஆகஸ்ட் 5: மத்திய அரசாங்கம், சிலாங்கூரின் 12 ஊராட்சி மன்றங்கள் கோரிய ரிம 105.17 மில்லியன் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) ரிம 52.09 மில்லியன் மட்டுமே திருப்பிக் கொடுத்துள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். மலேசியா அரச சுங்கத்துறை இலாகா  மீதமுள்ள ரிம 53.08 மில்லியன் மதிப்பிலான கோரப்பட்ட ஜிஎஸ்டி வரியை 12 ஊராட்சி மன்றங்களுக்கு இன்னும் திருப்பி செலுத்த தவறியது.

கோரப்பட்ட தொகை கடந்த ஏப்ரல் 2015-இல் இருந்து இந்த ஆண்டு ஜூன் 30 வரை உள்ள பாக்கியாகும்.

”  சுங்கத்துறையின் தலைமை இயக்குநர், பல்வேறு ஏற்றுக் கொள்ள முடியாத காரணங்களைக் கூறலாம். ஜிஎஸ்டி வரியை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும், சிலாங்கூர் மாநிலம் மத்திய அரசாங்கத்திற்கு அதிகமாக செலுத்தும் மாநிலம் ஆகும்,” என்று கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :