SELANGOR

யுனிசெல் இந்திய மாணவர்கள் படைத்த அறிவு கனல் 2017

ஷா ஆலம், ஆகஸ்ட் 26:

    சிலாங்கூர் பல்கலைகழகம் (யுனிசெல்)  ஷா ஆலாமில் நடைபெற்ற அறிவு கனல் 2017’இல் சுமார் 50 இடைநிலை பள்ளியைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் கலந்து கொண்டனர். ஷா ஆலாம் மற்றும் கிள்ளான் வட்டாரங்களில் இருந்து நான்கு பள்ளிகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி சிலாங்கூர் பல்கலைகழகம் இந்திய கலாச்சாரம் மற்றும் மொழி கழகம் (ஐசிஎல்எஸ்) ஏற்பாட்டில் நடைபெற்றது.
   யுனிசெல் ஐசிஎல்எஸ் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கட்டுரை எழுதும் போட்டி, பேச்சுப் போட்டடி, கவிதை ஒப்புவிக்கும் போட்டி மற்றும் புதிர்போட்டி ஆகிய போட்டிகளில் மாணவர்கள் சிறந்த முறையில் கலந்துக் கொண்டனர்.
    இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக சிலாங்கூர் பல்கலைகழக துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் நோர் முகமது நவாவி, சிலாங்கூர் பல்கலைகழக முதுகலை பட்டபடிப்பிற்கான பிரிவின் துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் குணசேகரன் கருப்பணன், சிலாங்கூர் பல்கலைகழக இந்திய கலாச்சாரம் மற்றும் மொழி கழக ஆலோசகர் கலை மற்றும் வடிவமைப்பு துறையைச் சார்ந்த விரிவுரையாளர் திருமதி ஷாமினிஸ்வரி சுகுமாறன் மற்றும் வணிக துறையைச் சார்ந்த விரிவுரையாளர்  திருமதி முனைவர் மோகனா முத்து குமாரசாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
   இந்நிகழ்ச்சியின் இயக்குனர் திரு. திலிப் குமார் வருகை தந்து ஆதரவு அளித்த அணைத்து தரப்பினருக்கு நன்றி தெறித்து கொண்டார்.
செய்தி: யுனிசெல் ஐசிஎல்எஸ்
#கேஜிஎஸ்                      .

Pengarang :