NATIONAL

டத்தோ சரவணன் அழைக்கப்படுவார், போலீஸ் அதிகாரி தகவல் 

கோலா லம்பூர், செப்டம்பர் 6:
வாக்குமூலம் பெறுவதற்காக துணையமைச்சர் டத்தோ சரவணனும், அவரது சகாக்களும் போலீசாரால் அழைக்கப்படுவர் என்று நம்பப்படுகிறது.

கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் உள்ள தமிழ் மலர் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உதவிட டத்தோ சரவணனும், சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களும் போலீசாரால் அழைக்கப்படுவர் என்று டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி சுக்ரி கமான் உறுதிப்படுத்தினார்.

போலீஸ் புகார் அடிப்படையில் கைகலப்பில் ஈடுபட்டவர்களை போலீஸ் விசாரிக்கும். இந்த விசாரணைக்கு டத்தோ சரவணனும் அழைக்கப்படுவார் என்று போலீஸ் அதிகாரி கூறினார். சம்பவத்தை நேரில் பார்த்த சிலரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டதாக கமான் தெரிவித்தார்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சராக இருந்து வரும் டத்தோ சரவணன், நேற்று தமிழ் மலர் அலுவலகத்தில் நடந்த கைகலப்பிற்குப் பின்னணியில் இருந்திருப்பதாக பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களால் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. பத்திரிகையின் உரிமையாளர் ஓம்ஸ் தியாகராஜன், மற்றும் தமிழ் மலர் தலைமை ஆசிரியர் சரஸ்வதி கந்தசாமியும் தாக்கப்பட்டதற்கு சரவணனும் அவரது சகாக்களும் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச் சாட்டை சரவணன் நிராகரித்தார். பத்திரிகை அலுவலகத்தில் நடந்த கைகலப்பை சமாதானம் படுத்தவே தாம் அங்குச் சென்றதாக சரவணன் கூறி வந்தார்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ம.இ.கா கட்டடத்தின் வாடகை விவகாரம் தொடர்பாக தமிழ் மலர் டத்தோ சரவணனை தொடர்பு படுத்தி எழுதியதால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்களும் அவரும் தமிழ் மலர் அலுவகலத்தை முற்றுகை இட்டனர் என்றும் வெடித்த வாய்சண்டையில் பத்திரிகையாளர்கள் மேல் கைவைக்கும் நிலைமை ஏற்பட்டதாக பத்திரிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

#சரவணன்


Pengarang :