SELANGOR

ஐடிஇ: இனங்களின் ஆய்வு மையம் ஒற்றுமைக்கு அடித்தளம்

ஷா ஆலம், செப்டம்பர் 13:

டாருல் ஏசான் கல்லூரி (ஐடிஇ) அமைத்துள்ள ஐடிஇ இனங்களின் ஆய்வு மையம் மலேசியாவில் இனங்களிடையே நல்லிணக்கத்தை மற்றும் ஒற்றுமையை ஏற்படுத்த பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்த உள்ளது என்று ஐடிஇ மையத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் டத்தோ முனைவர் முகமட் ரிஸுவான் ஓத்மான் கூறினார். இந்த ஆய்வு மையத்தை பேராசிரியர் ஐடிஇ தலைமையகத்தில் துவக்கி வைத்தார்.

மலேசியாவில் பல்வேறு வேற்றுமைகளை பலவீனமாக பார்க்காமல் நாட்டு மக்களின் பலமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

RAKYAT MALAYSIA

 

 

 

 

இந்த ஆய்வு மையம் அமைந்த நோக்கம், இனம் மற்றும் மதங்களிடையே புரிந்துணர்வு மற்றும் உறவுகள் மேம்படுத்தும் நோக்கில் அமைக்கப் பட்டுள்ளது. இஃது இனங்களிடையே நல்லிணக்கத்தை மற்றும் ஒற்றுமையை மேம்படுத்த கொள்கைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தும் என்று கூறினார்.

இன்றைய வட்ட மேசை விவாதத்தில், மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் முனைவர் மஸ்லி மாலிக், ஐடியஸ்ஸின் திரிஷியா இயோ, மலேசிய தேசிய பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் டெனில்சன் ஜெயசூர்யா மற்றும் கலை பண்பாட்டுக் கலைஞர் எடீன் கூ ஆகியோர் கலந்து கொண்டனர்.

#கேஜிஎஸ்


Pengarang :