NATIONAL

அன்வார்: மக்களின் சிக்கல்களை தீர்க்க கவனம் செலுத்த வேண்டும்

ஷா ஆலம், செப்டம்பர் 15:

கெஅடிலான் கட்சியின் அவைத்தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது கட்சி மற்றும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தொடர்ந்து மக்கள் எதிர் நோக்கும் பொருளாதார சிக்கல்களின் மீது கவனம் செலுத்தி தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அம்னோ மற்றும் தேசிய முன்னணியின் நிர்வாகக் கோளாறுகளை மற்றும் ஊழல்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்றார். பொருட்களின் விலை உயர்வு, எரிபொருள் விலை மற்றும் ஜிஎஸ்டியின் தாக்கம் ஆகியவை மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி உள்ளது.

”  பொருட்களின் விலை உயர்வினால் மக்கள் படும் இன்னல்கள் எனக்கு புரிகிறது. அது மட்டுமில்லாமல் அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம், எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தினால்  மக்களின் வாழ்க்கை செலவீனங்கள் அதிகரித்து வருகிறது. இஃது மலேசிய மக்களுக்கு பெரும் சுமையை கொடுக்கிறது. நம் நாட்டு மக்கள் அனைவரும் இதை விட சிறப்பாக வாழ்ந்திருக்க முடியும். ஆனாலும் மத்திய அரசாங்கம் மற்றும் அதன் மூத்த தலைவர்களின் தவறான வழிமுறை மக்களுக்கு பல்வேறு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நஜிப்பின் மத்திய அரசாங்கம், தொடர்ந்து மக்களிடையே தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் தகவல் ஊடகங்களை பயன்படுத்தி நாடு சிறந்த முறையில் இயங்கி வருகிறது என பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்று கடுமையாக சாடினார்.

#கு. குணசேகரன் குப்பன்


Pengarang :