NATIONAL

தொடர்ந்து பெய்த மழையினால் பினாங்கில் திடீர் வெள்ளம்

ஜோர்ஜ் டவுன், செப்டம்பர் 15:

நேற்று இரவில் இருந்து தொடர்ந்து பெய்த கடும் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக ஜோர்ஜ் டவுனில் 0.2 மீட்டரில் இருந்து 0.3 மீட்டர் அளவில் நீர் மட்டம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாயான் பாரு, சுங்கை பினாங்கு, பத்து பெரிங்கி மற்றும் செபராங் பிராயின் மற்ற பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டது.

அஸ்ட்ரோ அவானியின் செய்தியின் அடிப்படையில், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பாயா தெரூபோங் பகுதிகளில் மரங்கள் சார்ந்ததாக கூறினார்.பி. ரம்லி சாலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டதாகவும் வெள்ள அளவு 0.3 மீட்டராக பதிவு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தீயணைப்பு படையினர் படகின் மூலம் பொது மக்கள் மற்றும் மாணவர்களை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்றனர்.

வடிகால் மற்றும் நீர்ப்பாசன இலாகாவின் அறிக்கையின் படி சுங்கை பினாங்கு மற்றும் சுங்கை ஆயர் ஈத்தாம் அபாய அளவை எட்டியது என்று தெரிவித்தனர். இஃது மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

#கேஜிஎஸ்


Pengarang :