SELANGOR

35 பேருக்கு பெடுலி சிஹாட் அட்டை வழங்கப்பட்டது

செப்பாங், செப்டம்பர் 20

மாநில அரசாங்கம் மக்கள் நலன் கருதி மக்களுக்காக உருவாக்கிய நலத்திட்டங்களில் ஒன்றான பெடுலி சிஹாட் இலவச மருத்துவ அட்டை சிப்பாங் வட்டாரத்தில் சுமார் 35 பேருக்கு வழங்கப்பட்டதாக சிப்பாங் நகராண்மைக்கழகத்தின் கவுன்சிலர் சிவகுமார் தெரிவித்தார்.

விண்ணப்பம் செய்து ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களின் மருத்துவ அட்டையை வீடு வீடாக சென்று வழங்கியதாகவும் அவர் கூறினார்.
இதுவரை இவ்வட்டாரத்தில் சுமார் 350 பேர் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இலவச மருத்துவ அட்டையை பெற்றிருப்பதாக கூறிய அவர் இன்னும் அதிகமான இந்தியர்கள் தங்களை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அண்மையில் பதிவு செய்யப்பட்ட 32 பேரின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கான பெடுலி சிஹாட் மருத்துவ அட்டையை சிவகுமாரும் வட்டார இந்திய கிராமத்து தலைவர் இராமனும் வீடு வீடாக கொண்டு சென்று வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிவுமிக்க மக்கள் நல திட்டங்களில்  (ஐபிஆர்) சிலாங்கூர் வாழ் மக்களின் பங்களிப்பு குறிப்பாக இந்தியர்கள் ஆதரவு மிகப் பெரிய அளவில் இருப்பதாக பெருமிதம் கொண்டார். இது மட்டுமில்லாமல் தாவாஸ், மெஸ்ரா ஊசியா எமாஸ், ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை, சிலாங்கூர் ஹிஜ்ரா கடனுதவி என 43 ஐபிஆர் திட்டங்களை மாநில பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் நிறைவேற்றி வருவதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :