SELANGORUncategorized @ta

சிலாங்கூரின் வரவு செலவு திட்டம் அனைத்து தரப்பினருக்கும் பயன் அளித்துள்ளது

ஷா ஆலம், நவம்பர் 4:

2018-இன் சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டம் அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் முன்னணி மாநிலமான சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி நேற்று தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் படி இருப்பதாக சிலாங்கூர் மாநில தோட்டத் தொழிலாளர், வறுமை ஒழிப்பு மற்றும் பரிவு மிக்க அரசாங்கம் ஆகிய நிரந்தர குழுவின் ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் கூறினார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களும் விடுபடவில்லை என்று தெரிவித்தார். இதில் பெரும்பாலும் இந்திய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

”  எல்லா மக்களும் சந்தோஷமாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். தமிழ்ப் பள்ளிகளுக்கான ரிம 5 மில்லியன் நிலை நிறுத்தப்பட்ட வேளையில் சீக்கிய சமுதாயத்திற்கு மேலும் ரிம 1 மில்லியன் வழங்கப்பட்டது. அதேபோல் இஸ்லாம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு வழங்கப் படும் மானியங்கள் நிலைநாட்டியதும் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் நலத்திட்டங்களுக்கு ரிம 1.3 மில்லியன் ஒதுக்கீட்டை மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி அறிவித்தார். இதன் மூலம் இந்திய சமுதாயத்திற்கு பெரும் நன்மைகள் சென்று அடையும்,” என்று 2018-இன் வரவு செலவு திட்டத்தை மாநில சட்ட மன்றத்தில் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தாக்கல் செய்த பிறகு சிலாங்கூர் இன்றுக்கு   விவரித்தார்.

மேலும் பேசுகையில், தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி ரிம 500,000 ஒதுக்கீடு செய்த மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கு நன்றி கூறினார்.

#வீரத் தமிழன்


Pengarang :