NATIONALUncategorized @ta

ராணுவ முகாம் கட்டப்படவில்லை, ஆனால் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது?

ஷா ஆலம், நவம்பர் 7:

மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) அண்மையில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் திறக்கப்படாத மூன்று  ராணுவ முகாம்களில் சேர்க்கப்பட்ட ராணுவ வீரர்களின் பெயர்கள் தோடர்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் ஈசா அன்வார் கூறினார். இந்த நடவடிக்கை மூலம் எஸ்பிஆர் மீது எதிர்மறையான தோற்றதத்தை ஏற்படுகிறது என்றார்.

”  மிக அதிகமான ராணுவ வீரர்கள் பெரா ராணுவ முகாம், பாகான் டத்தோ ராணுவ முகாம் மற்றும் சிகாமாட் ராணுவ முகாம் போன்ற கட்டப்படாத முகாம்களில் எப்படி வாக்காளர்களாக சேர்க்க முடியும்? 13-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 1217 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது இங்கு மிக முக்கியம்,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

கெஅடிலான் கட்சியின் தேர்தல் இயக்குனருமான நூருல், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றார்.

#வீரத் தமிழன்

வீ


Pengarang :