SELANGOR

மத்திய அரசாங்கத்தின் குறைந்த விலை வீடமைப்பு திட்டக் கொள்கைகள் பலவீனமானது!!!

கோலா லம்பூர், நவம்பர் 21:

மத்திய அரசாங்கத்தின் குறைந்த விலை வீடமைப்பு திட்டக் கொள்கைகள் மக்களுக்கு நன்மை அளிக்க தவறிவிட்டது. இந்த தோல்வியை தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ புங் மொக்தார் ராடின் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

”   கோலா லம்பூரில் குறைந்த விலை வீடமைப்பு திட்டங்களில்  வாங்குவதற்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் உள்ளது. மக்கள் வீடுகளை பார்க்கத்தான் முடியும் ஆனால் வாங்க முடியாது என்று மக்கள் கூறுவதை நேரிடையாக  கேட்டிருக்கிறேன். பொது மக்கள் பிரிமா வீடமைப்பு திட்டங்கள் நோக்கத்தை அடையவில்லை மாறாக வாங்க முடியாத வீடுகளை மட்டுமே கட்டுகிறது,” என்று கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் இன்று அவையில் கூறியது தேசிய முன்னணியின் தோல்வியை காட்டுகிறது என்றால் அது மிகையாகாது.

#வீரத் தமிழன்

=EZY=


Pengarang :