SELANGOR

ஜனவரி 2018 முதல் இன்பென்ஸ் கல்லூரியில் திறனாய்வு கல்வி மேற்கொள்ளலாம்

ஷா ஆலம், நவம்பர் 21:

மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்பிஎம்) கொண்டுள்ள மாணவர்கள் ஜனவரி 2018 தொடங்கி இண்பென்ஸ் அனைத்துலக கல்லூரியில்  (இண்பென்ஸ்) திறனாய்வு கல்வியை மேற்கொள்ள முடியும் என்று இண்பென்ஸ் கல்லூரி  தொழில்முறை தொடர்பு பிரிவு தலைவர் நூர் அட்னின் ஷாமில் ஹாலிக் பாஷா கூறினார். மாணவர்கள் பதிவு தற்போது ஆரம்பித்துவிட்டது என்றும் இணையத்தில் www.inpens.edu.my பதிந்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஒன்றான இண்பென்ஸ் ஆடோமோடிவ், எலக்ட்ரானிக்ஸ், எலக்டிரிக்கல், மோட்டார் வண்டி, ஏர் கொண்ட், கணினி, டெக்ஸ்டைல்ஸ் & உடைகள், அழகு நிலையம், வர்ணம் பூசுதல், சிகை அலங்காரம், சமையல் போன்ற துறைகளில் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது என்று விவரித்தார்.

2018 வரவு செலவு திட்டத்தில், மாநில அரசாங்கம் இண்பென்ஸ் அனைத்துலக கல்லூரி மாணவர்கள் திறனாய்வு கல்வியை மேற்கொள்ள ரிம 5 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#வீரத் தமிழன்


Pengarang :